தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு!

2 Nov 2026, 12:43 am
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு!

விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு!

அவிநாசி நவ.1அவிநாசி பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான தீபாவளிபோனஸாக 13.55 சதவீதம் வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி நெசவாளர் நலச் சங்கத்திற்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான போனஸ் பேச்சுவார்த்தை, ஞாயிறன்று, அவிநாசி அருகே உள்ள நம்பியாம்பாளையத்தில் உள்ள நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி நெசவாளர் நலச்சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி தலைமை தாங்கினார்.

நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸாக 13.55 சதவீதம் வழங்குவது என இரு தரப்பினரிடையேயும் சுமுக உடன்பாடு ஏற்பட்டுஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் கே.முருகன் ஆகியோரும், ஏ.ஐ.டி.யு.சிசார்பில் பொது தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் என்.செல்வராஜ், மற்றும் பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி நெசவாளர் நலச் சங்கத்தின் சார்பில் செயலாளர் சம்பத் (எ) சண்முகசுந்தரம், பொறுப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மங்கலம் இதேபோன்று, திருப்பூர் அருகே மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான போனஸ் 13.18 சதவீதம் வழங்குவது என இருதரப்பு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

கூலிக்கு நெசவு செய்யும் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் மங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் சுல்தான்பேட்டை அம்மன் கலையரங்கத்தில் ஞாயிறன்று போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனசாக 13.18 சதவீதம் வழங்குவது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கோபால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், ஏ.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகள் விசைத்தறி மாவட்ட பொதுச்செயலாளர் பி. முத்துச்சாமி, மாவட்டத்தலைவர் கே. வேலுச்சாமி, ஏடிபி தலைவர் ஏ .சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி நடராஜ், கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.