தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

75% கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுதிடுக! விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

16 Jun 2026, 12:06 am
75% கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுதிடுக! விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>75% கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுதிடுக! விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>நாமக்கல், ஜூன் 15- விசைத்தறி தொழிலாளர்களுக்கான 75% கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 14.7.26 அன்று பள்ளி பாளையத்தில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் முடிவெடுத்துள் ளது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐ டியு பள்ளிபாளையம் ஒன்றிய குழு 21 ஆவது மகாசபை கூட் டம் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.முத்துக்குமார் தலைமை யில் ஞாயிறன்று காவேரி ஆர்.எஸ்.தொழிற்சங்க அலுவலகத் தில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் கே.மோகன் துவக்கவுரையாற்றினார். ஒன்றியக்குழு செயலாளர் கே. குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். விசைத்தறி உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் கடந்த 1.10.25 முதல் ஓய்வூதிய ஆணை பெற்ற வர்களுக்கு கடந்த எட்டு மாத காலமாக ஓய்வூதியம் வழங்கப் படவில்லை. அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் உடனே ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதி யம் ரூ.3000 உள்ளிட்ட நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். விழிப்புணர்வு இன்மையால் போதிய வரு மானம் இல்லாததால் கடன் நெருக்கடியால் தனது உடல் உறுப்பான கிட்னியை கொடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு மாதம் ரூபாய் 5000 நிவாரணமும், மருத்துவ உதவி, வீட்டு வசதி வழங்க வேண்டும். வீடு இல்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆயக்காட்டூர் பகுதியில் கட்டப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டகுடியிருப்பில் முன் னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கான 75% கூலி உயர்வு உள் ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை பேசித் தீர்வு காணக் கோரி விசைத்தறி உரிமையாளர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி நான்கு மாத காலம் ஆகியும், பேசி தீர்வு காண முன் வராததை கண்டித்து, விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கமும், வருகின்ற 14.7.26 அன்று பள்ளி பாளையத்தில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த வும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் நிறைவு றையாற்றினார். இதில், சங்க ஒன்றியத் தலைவராக எஸ்.முத்துக்குமார், செயலாளராக கே.குமார், பொருளாளராக செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு வும், 23 பேர் கொண்ட ஒன்றிய குழுவும் தேர்வு செய்யப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.