காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
3 Jan 2026, 2:20 pm
<p><strong>காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு</strong></p>
<p>நாமக்கல், ஜன.3- காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்துவிட்ட நான்கு சாய தொழிற் சாலைகளுக்கு மின்சார இணைப்பு துண்டிப்பு, ஒரு சாய தொழிற்சா லைக்கு சீல் வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சாக்கடை கால்வாய் மூலம் அடர்ந்த வேதிப்பொருட்கள் கொண்ட சாயக் கழிவு நீர் பல லட்சம் லிட்டர் கலக்கப் பட்ட நிலையில் வெளியேறியது. இந்நிலையில் பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் சமூக வலைத்தளம் மூலம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி தலை மையிலான பறக்கும் படை அதிகா ரிகள், இரவு நேரங்களில் சாய தொழிற்சாலைகளில் ஆய்வுகளை நடத்தினர். அப்பொழுது 5 சாய தொழிற்சாலைகள் நேரடியாக பள்ளிபாளையம் சாக்கடை கால் வாய்கள் மூலம் சாய கழிவுநீர்களை திறந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளியன்று மதியம் பள்ளிபாளையம் ஒட்ட மெத்தை பகுதியில் செயல்படும் நான்கு சாய தொழிற்சாலைக ளுக்கு மின்சார இணைப்பு துண்டிக் கப்பட்டது. தொடர்ந்து ஒரு சாயத் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண் டிக்கப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்த னர். மேலும், சாயக்கழிவு நீரை சட்ட விரோதமாக வெளியேற்றும் சாய ஆலைகள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்ப டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p> </p>
