தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

7 Dec 2025, 3:52 pm
கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்
<p><strong>கூலி உயர்வு வழங்கக் கோரி சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்</strong></p> <p>தென்காசி, டிச.7 - கூலி உயர்வு வழங்கக் கோரி &nbsp;சங்கரன்கோவிலில் ஞாயிறன்று (டிச.7) விசைத்தறித் தொழிலா ளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் 19 ஆவது நாளை எட்டி யுள்ள நிலையில், ஞாயிறன்று சங்கரன் கோவில் லட்சுமிபுரம் 4 ஆவது தெரு வில் சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.மாரியப்பன் தலைமையில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட் டம் நடைபெற்றது. கூலி உயர்வை முழுமையாக அமல்படுத்தக் கோரி விசைத்தறித் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விசைத்தறி முதலாளி கள், நிலுவையில் உள்ள கூலி உயர்வை தருவதில் தயக்கம் காட்டி &nbsp;வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும் கூலி உயர்வு &nbsp;ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் 50 சதவீதம் கூலி உயர்வு மற்றும் நிலுவையை வழங்க &nbsp;வேண்டும் என்று வலியுறுத்தி விசைத் தறித் தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிறன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தை மாநிலத் &nbsp;தலைவர் சோமசுந்தரம் துவக்கி &nbsp;வைத்தார். சங்கத்தின் மாவட்டச் &nbsp;செயலாளர் ரத்தினம், மாவட்டப் &nbsp;பொருளாளர் மாணிக்கம், மாவட்ட &nbsp;துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அசோக்ராஜ், உ.முத்துப்பாண் டியன் ஆகியோர் ஆதரித்துப் பேசி னர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் மணிகண்டன் நிறைவுரையாற்றி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.