பொங்கல் பண்டிகையையொட்டி பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!மூடப்படும்
4 Jan 2026, 5:55 pm
<p><strong>பொங்கல் பண்டிகையையொட்டி பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!மூடப்படும்</strong></p>
<p>தமிழர் பண்டிகையான பொங் கல் விழா தமிழ்நாடு முழுவதும் வரும் ஜன.15 ஆம் தேதி கொண் டாடப்பட உள்ளது. இந்த கொண் டாடத்திற்கு விவசாயிகள், பொது மக்கள், வியாபாரிகளும் தயாராகி வருகின்றனர். ஆரம்பத்தில் பொங் கல் விழா கிராமங்களில் மண் பானை கொண்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது, கால்நடைகளை வழிபடுவது என கொண்டாடப்பட்டது. மேலும் நகர பகுதியில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு மூலம் சில்வர் பாத்திரங் களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். காலப் போக்கில் நகர் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் மண் பானைகளில் பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இத னால் தமிழகத்தில் மண் பானை விற்பனையும் அதிகளவு நடக்க துவங்கியது. அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன் னிட்டு கோவை கவுண்டம்பாளை யம் பகுதியில் மண்பானைகள் தயா ரிக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இங்கு தயாரிக் கும் மண்பானைகள் கோவை மாந கர் பகுதிகளுக்கு மட்டும் அல்லா மல் திருப்பூர், நீலகிரி மாவட் டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மண்பானை தயாரிப்பாளர்கள் கூறியதாவது, பொங்கல் பண்டிகையை முன் னிட்டு மண்பானை தயாரிக்கும் பணி கள் வேகமாக செய்து வருகிறோம். இங்கு கால் அடி முதல் 3 அடி வரை மண்பானைகளை தயாரித்து வருகிறோம். மேலும் முதல் நாள் பானை செய்து காய வைப்போம், இரண்டாம் நாள் அதனை தட்டி தயார் செய்வோம், தொடர்ந்து சுமார் 100 முதல் 200 பானைகள் சேர்ந்த பின் அதனை சுட வைத்து விற்பனைக்கு தயார் செய்கிறோம். மேலும் மண்பானைகளை தயாரித் தாலும் அதனை வைத்து விற் பனை செய்ய ஏதுவான இடம் இல்லை, எனவே எதாவது ஒரு இடத்தை அரசு விற்பனைக்கு பயன்படுத்த கொடுக்க வேண்டும். அதே போல தற்போது மண் பானை செய்ய போதுமான அளவு மண் கிடைப்பதிலும் சிக்கல் உள் ளது. இதனால் பானைகள் தயா ரிக்கும் பணிகளில் சற்று தொய்வு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாதவாறு மண்பானைகளில் தேவையும் தற்போது அதிகரித் துள்ளது மகிழ்ச்சி தான் என்றனர். - கவி</p>
