தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Nov 2025, 4:58 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அவிநாசி, நவ.29- அவிநாசி நகராட்சியில் புதிய வணிக வளாகத்தி லுள்ள 30 கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட் டுள்ளது. அவிநாசி பழைய பேருந்து நிலையம் முன்பு வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் 36 கடைகளை வாடகைக்கு விடுவதற்கான பொது ஏலம் மற்றும்  ஒப்பந்தப்புள்ளியை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டி ருந்தது. இதற்கான வைப்புத்தொகை செலுத்துவ தற்கு இரண்டு நாள் வரை அவகாசம் அளிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி வெள்ளி யன்று 11.30 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் (பொ) அருள் முன்னிலையில் பொது ஏலம்  நடைபெற்றது. இதில் பங்கேற்க சில வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். ஏலத்தின் முடிவில், மொத்த முள்ள 36 கடைகளில் வெறும் 6 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மீதமுள்ள 30 கடைகளை ஏலம்  எடுக்க வியாபாரிகளோ, பொதுமக்களோ முன்வராத தால், அந்த கடைகள் ஏலம் போகவில்லை. மீதமுள்ள 30 கடைகளுக்கான மறு ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

தருமபுரி, நவ.29- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எரப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமால் (30) என்பவர், 17 வயது சிறுமியை கடந்த 2018 ஜன.15 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையுடன் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக் குப்பதிவு செய்து காவல் துறையினர் திருமாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக் கின் புலன் விசாரணை முடித்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மோனிகா, திருமாலை குற்றவாளி யாக அறிவித்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார்.

இளம்பெண் தற்கொலை: கணவர் உட்பட 2 பேருக்கு சிறை

உதகை, நவ.29- இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த இடுஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் ஷோபனா என்பவருக்கும், கீழ் தொரையட்டி பகுதி யைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரபுவுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த வேலன் என்பவ ரது மனைவி தீனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியதாக தெரிகிறது. இதன் கார ணமாக குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு வந்துள் ளது. மேலும், பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தி னர் ஷோபனாவை தகாத வார்த்தையால் திட்டி மன  உளைச்சல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இத னால், ஷோபனா கோபித்துக் கொண்டு அவருடைய தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு குடும் பத்தினர் சமாதானம் பேசி ஷோபனாவை பிரபு வீட்டுக்கு அனுப்பினார். ஆனாலும், பிரபு - தீனா  பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை தொடர்ந்த தால், ஷோபனா கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் விசா ரணை நடத்தி, ஷோபனாவின் கணவர் பிரபு, அவ ருடைய குடும்பத்தினர் மூன்று பேர் மற்றும் தீனா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்று சனி யன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், பிரபு மற்றும் தீனா ஆகிய இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம்  இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

நியமன உறுப்பினர் பதவியேற்பு!

நாமக்கல், நவ.29- நாமக்கல் மாநகராட்சி யில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான மணி மாறன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நியமன உறுப்பினருக்கு வியாழ னன்று பதவியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மணிமாற னுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மேயர் கலா நிதி, துணை மேயர் பூபதி, ஆணையர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நியமன ஆணையை வழங்கி, அவ ரது இருக்கையில் அமர வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.