அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
13 Feb 2026, 5:58 pm
<p><strong>அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்'</strong></p>
<p>நாமக்கல், பிப்.13- நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் துறையின் கட்டமைப்பு சுருக்கப்பட்டு சேவைகள் தனியாருக்கு மாற்றப்படுவதை கண்டித்து, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தபால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணிநிலைத்தன்மை, ஊதிய உயர்வு, ஓய்வூதிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்டச் செயலாளர் தர்மலிங்கம் தலைமை ஏற்றார். சங்க நிர்வாகிகள் கமல்ராஜ், துரைசாமி, ஜெகதீஸ்வரன், அய்யப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.</p>
<p> </p>
