முந்தய பக்கம்

அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

12 Dec 2025, 3:12 pm
அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
<p>சேலம், டிச.12- துணை அஞ்சலகங்களை மூட எதிர்ப்பு &nbsp;தெரிவித்து சேலம் பழைய பேருந்து நிலை யம் அஞ்சல் தலைமை அலுவலகம் முன்பாக வெள்ளியன்று அஞ்சல் ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சீர்திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவ தும் பல அஞ்சலகங்களை ஒன்றிய மோடி அரசாங்கம் மூடி வருகிறது. குறிப்பாக தனி யார் லாபம் கொழிக்கும் வகையில் அஞ் சல் துறையை விற்பனை செய்யும் நோக் கோடு செயல்பட்டு வருகிறது. ஆட்கு றைப்பு அலுவலக இணைப்பு மற்றும் டார் கெட் தொடர் பணிப்பழுவை ஊழியர்கள் இடையே திணித்து வருவதை கண்டித்தும் சேலம் கிழக்கு கோட்டத்தில் மட்டும் ஏற்க னவே பல அஞ்சலகங்களை மூடியுள்ள நிலை யில் தற்போது நாராயண நகர் மற்றும் சேலம் எக்ஸ்டென்சன் பகுதியில் செயல்படும் துணை அஞ்ச லகத்தை மூடும் முடிவிற்கு &nbsp;கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தேசிய அஞ் சல் ஊழியர் சங்கம் அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏற்க னவே மூடப்பட்ட அஞ்சலகங்களுக்கு &nbsp;பதிலாக அல்லிக்குட்டை நகரமலை அடிவா ரம் அஞ்சலகம் திறக்கப்பட்டது போல் பரி சீலனையில் உள்ள அலுவலகங்கள் மாற்றி &nbsp;அமைக்க வேண்டும். சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து ஊழியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நெட் அக்கவுண்ட் &nbsp;முற்றிலும் களையப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் &nbsp;செயலாளர் ஜெயந்தன் தேசிய அஞ்சல் ஊழி யர் சங்கத்தின் செயலாளர் துரைமுருகன், கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் மோகன், ஓய்வூதியர் சங்க நிர் வாகிகள் கே.ஆர்.கணேசன் நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram