அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் மாநாடு
5 Dec 2025, 4:21 pm
<p><strong>அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் மாநாடு</strong></p>
<p>சேலம், டிச.5- ஓய்வூதியர்களுக்கு விரோதமான பென் சன் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும் பப்பெற வேண்டும் என அகில இந்திய அஞ் சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் மாநாடு வலியு றுத்தியுள்ளது. அகில இந்திய அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூ தியர் அமைப்பின் சேலம் மாவட்ட ஏழாவது மாநாடு சேலம் தெய்வீகம் திருமண மண்டபத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் எஸ்.கருணா நிதி மாநாட்டை துவக்கி வைத்தார். அகில இந்திய தலைவர் ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. ராஜ்குமார் வாழ்த்திப் பேசி னார். இதில், ஓய்வூதியர்க ளுக்கு விரோதமான பென் சன் திருத்த மசோதா 2025 உடனடியாக திரும்பப்பெற வேண்டும், தொழிலாளர்க ளுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண் டும். பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு படி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஒன்பது வரு டம் இலாகா சேவை முடித்தவர்களுக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், தலைவராக சி.வெங்கடே சன், செயலாளர் டி.நேதாஜிசுபாஷ், பொரு ளாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், திர ளானோர் பங்கேற்றனர்.</p>
