ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
8 Jul 2026, 9:15 pm
<p><strong>ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 8 – ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். கிராஜுவிட்டியை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். குரூப் இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். பி-3 கோட்டத் தலைவர் ஜேக்கப்ராஜ் தொடங்கி வைத்து பேசினார். பி-3 கோட்ட செயலாளர் உதயகுமார், பி-4 நிஷாகர் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். ஜி.டி.எஸ்.யு. கோட்ட செயலாளர் ஞானபாலசிங், ஐசக் டேனியல், ஆறுமுகம், கற்பகராஜ், கண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
