தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டார்கெட் கொடுமை: அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

14 Jul 2026, 10:35 pm
டார்கெட் கொடுமை: அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>டார்கெட் கொடுமை: அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூலை 14- அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப் படும் டார்கெட் கொடுமையை உடன டியாக நிர்வாகம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் அஞ்சல் ஊழி யர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் டார்கெட் வைத்து வேலை வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து, உடனடியாக அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்ப டும் டார்கெட் கொடுமையை நிறுத்த வேண்டும். பகுத்தாய்வு என்ற பெய ரில் ஒழிக்கப்பட்ட 1520 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். தனி யார் கூரியர் நிறுவனத்திற்கு நிகராக பிரான்சிஸ் ஸ்கீம் என்ற பெயரில் செயல்படுவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் சங் கம் சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் ஜெயந்தன், பொருளாளர் கோமதி, ஓய் வூதியர் சங்கத் தலைவர்கள் கே.ஆர். கணேசன், நேதாஜி சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் பி.முனு சாமி தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் எஸ்.செந்தில் குமார் உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந் திய அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க மண்டலச் செயலாளர் எஸ். கருணாநிதி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.