ஏழை பெண் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குமுக்கியப் பங்களிப்பு
9 Oct 2026, 12:06 am

ஏழை பெண் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குமுக்கியப் பங்களிப்பு

சென்னை,அக்.8-ஏழைப் பெண் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முறைசாராத் துறையிலேயேபணியாற்றி, நாட்டின் பொருளாதாரத்திற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்று உழைக்கும் பெண்கள் மன்றம் மற்றும் பெண்களுக்கான இந்திய கூட்டுறவு அமைப்பின் தலைவர் நந்தினி ஆசாத் தெரிவித்துள்ளார்.சென்னை ஐ.ஐ.டி-யில் அண்மையில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் குறித்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “முறைசாராத் துறையில் உள்ள பெண்கள் அதிகாரமற்றவர்களாகவும், சமூகத்தின் பார்வைக்குத் தெரியாதவர்களாகவும், குறைந்த ஊதியம்பெறுபவர்களாகவும், எவ்வித வரன்முறைப்பாடும் இல்லாதவர்களாகவும் உள்ளனர். தங்களுக்கான உரிமைகளைப்போராடிப் பெறக்கூட இவர்களிடம் போதிய பேச்சுவார்த்தைத் திறன் இல்லை. முதலீடு செய்யும் திறன் இவர்களிடம் இல்லை அல்லது மிகவும் குறைவாகவே உள்ளது.பட்டினி, சமூக அடக்குமுறை, மற்றும் சாதி, வர்க்கம்,பாலினம் என்ற மூன்று அடுக்குச் சமத்துவமின்மைகளுக்கு நடுவே இப்பெண்கள் வாழ்கின்றனர். ஆயினும், கடும்உடலுழைப்பு மற்றும் பாகுபாடான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தங்களின் பாரம்பரிய முறைகள் மற்றும்புத்திசாலித்தனமான உத்திகள் மூலம் இவர்கள் அசாதாரணமான மீண்டெழும் தன்மையை வெளிப்படுத்துகின்றனர்.”

‘பாலினம் மற்றும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டு மாதிரியின் மூலம், இதுவரை சுமார் ரூ. 500 கோடி வரை சிறு கடன்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை மிகச் சிறந்தமுறையில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நந்தினி ஆசாத் குறிப்பிட்டார்.மேலும், “எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் வெறும்பிழைப்பை மட்டும் நடத்தவில்லை, மாறாகத் தங்கள் வாழ்வில் சிறந்து விளங்குவதோடு, பாலின சமத்துவம்மற்றும் சமூக நீதிக்காக முன்னின்று செயல்படுகிறார்கள். இந்த அமைப்பின் வழிகாட்டுதல், முறைசாராத் துறைப் பெண்கள் நிதி உதவி பெறவும், திறன் மேம்பாடு மற்றும்நிறுவன ஆதரவைப் பெற்றுத் தலைவர்களாக உருவெடுக்கவும் உதவுகிறது. சமூக, பொருளாதார மற்றும் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சிகள் மூலம்பெண்கள் உள்ளூர் சமூகத் தலைவர்களாக மாறியுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.