ஏழை மக்கள் விரும்புவது அமைதியைத்தான்; யுத்தத்தை அல்ல! தருமபுரியில் அ.சவுந்தரராசன் பேச்சு!
7 Mar 2026, 2:36 pm
<p><strong>ஏழை மக்கள் விரும்புவது அமைதியைத்தான்; யுத்தத்தை அல்ல! தருமபுரியில் அ.சவுந்தரராசன் பேச்சு!</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 7- “உலகில் போர் நடந்தால் முதலில் கொல்லப்படுவது குழந்தைகள்தான். ஏழை மக்கள் ஒருபோதும் யுத்தத்தை விரும்புவதில்லை, அவர்கள் அமைதி யையே விரும்புகிறார்கள்” என்று சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் தெரிவித்தார். தருமபுரி சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவைக் கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் சி. நாகராசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போர் அப்போது கூட்டத்தில் அ. சவுந்தரரா சன் பேசுகையில்,”அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தேவையற்ற யுத்தங்களை முன்னெடுக்கிறார். போர் எங்கு நடந்தாலும் பெட்ரோல் விலை மற்றும் விலைவாசி உயர்வு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். நாம் நடத்த வேண்டியது முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான வர்க்கப் போராக இருக்க வேண்டும். இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்கி றது. இதனை பிரதமர் மோடி தட்டிக் கேட்பதில்லை. முதலாளிகளின் தேவை களைப் பூர்த்தி செய்யும் அரசாகவே மோடி அரசு செயல்படுகிறது” என்றார். பொருளாதாரப் புறக்கணிப்பும் விவசாயிகள் பாதிப்பும் மேலும் அவர் பேசுகையில்,”மோடி ஆட்சியில் வேலையின்மை மற்றும் விவசாயிகள் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அமெரிக்கப் பருத்தி விதையினால் ஏற்பட்ட நஷ்டத்தால் மகாராஷ்டிராவில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். பெரும் முதலாளிகளுக்கு ரூ. 20 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ள மோடி அரசு, மின்சாரத் திருத்தச் சட்டம் மூலம் ஏழை மக்க ளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயல்கிறது. தொழிலாளிகள் இன்றி முதலாளிகளால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் உற்பத்தி யின் பலனை முதலாளிகள் மட்டுமே அனுபவிக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டினார். வாச்சாத்தி வெற்றி ஒரு வரலாற்றுப் பாடம் “வாச்சாத்தி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர்கள் உண்டியல் வசூல் செய்து உதவினர். நீண்ட நெடிய நீதிப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு, அநீதிக்கு எதிராகப் போராடும் பெண்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது” என அவர் குறிப்பிட்டார். நிதியளிப்பு மற்றும் பங்கேற்றோர் நிகழ்ச்சியின் நிறைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி ரூ. 2 லட்சத்து 66 ஆயிரத்தை அ. சவுந்த ரராசனிடம் மாவட்டத் தலைவர்கள் வழங்கினர். இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம்பரிதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரி முத்து, சோ. அருச்சுனன், வே. விஸ்வ நாதன், ஆர். மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ஒன்றியச் செய லாளர்கள் கே. கோவிந்தசாமி, எஸ். எஸ். சின்னராசு, பி. காரல் மார்க்ஸ், சி. சேகர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. எஸ். ராமச்சந்திரன், ஆர். சின்ன சாமி, என். கந்தசாமி, அ. ஜெயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் சி. கலாவதி நன்றி கூறினார்.</p>
