தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடஇந்தியப் பள்ளிகளின் அவல நிலை - நாகைமாலி

9 Oct 2026, 9:05 pm
வடஇந்தியப் பள்ளிகளின் அவல நிலை - நாகைமாலி

வடஇந்தியப் பள்ளிகளின் அவல நிலை - நாகைமாலி

சமீப காலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளை ஞர்கள், கல்வி வளாகங் களை ஆய்வுக்கு உட்படுத்தும் பணியினைப் பலமாநிலங்களில் மேற்கொ ண்டு வருகின்றனர். குறிப்பாக, பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியமாநிலங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளனர். நகர்ப்புறப் பள்ளிகளைவிடகிராமப்புறப் பள்ளிகளின் கட்டமைப்பும், கல்வித்துறை செயல்பாடும் நம்மை அதிர்ச்சியிலும், கவலையிலும்ஆழ்த்துகின்றன.

பீகார் பள்ளிகளின் அவல நிலை

வடபீகாரில் ஒரு பள்ளியின் வகுப்பறைச் சுவர்கள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன. ஆடுகள் அங்கே குடியிருக்கின்றன. இரண்டு ஆசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள் வகுப்பறையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 1982-ல் உருவாக்கப்பட்ட இப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர்கள் கிடையாது; எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆறு ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணி

யாற்றுகிறார்கள். ஆசிரியர்களுக்குக்கூட கழிப்பறை இல்லை. பக்கத்து வீட்டிற்குச் சென்று இயற்கை உபாதையைக் கழிக்கும் அவலநிலை ஆசிரியர்களுக்கே என்றால், மாணவர்களின் நிலை என்ன? மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகின்றனர். வெட்கப் படும் மாணவர்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதே இல்லை.

இப்பள்ளியில் 253 மாணவர்கள் பயில்கின்ற னர்; இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. எட்டாம் வகுப்பு மாணவர்கள் வராண்டாவில் உட்காருகின்றனர். 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடி நிழல்தான் வகுப்பறை. மாணவர்களின் மதிய உணவில் பூச்சி, புழுக்கள் நெளிகின்றன. இந்த அவல நிலை குறித்து மாவட்டக் கல்வி அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்கும்போது, “நாங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம்” என்கின்றனர். 2014-ல் துவங்கப்பட்ட ஒரு பள்ளிக்கு இதுவரை சொந்தக் கட்டிடம் இல்லை. பள்ளிக் கூடமே சமுதாயக் கூடத்தில்தான் இயங்குகிறது. ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புகள் உள்ள வேறொரு பள்ளியில், ஐந்து வகுப்பிற்கும் ஒரே வகுப்பறைதான். எப்படி பாடம் நடத்துவது? எவ்வாறு மாணவர்கள் புரிந்துகொள்வது? மாணவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்; பாடம் நடத்த முடியாது. இதே வகுப்பறையில் அலமாரி, மேஜை, உடைந்த நாற்காலிகள் மற்றும் மதிய உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் அடைந்து கிடக்கின்றன. உணவு வெட்டவெளியில் தயாரிக்கப்படுகிறது.

ராஜஸ்தான், உ.பி. பள்ளிகளின் சூழல்

ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு பள்ளியின் ஒருபுறம் சுற்றுச்சுவரும், மறுபுறத்தில் பிணங்களை எரிக்கும் மயானமும் உள்ளது. என்ன கொடுமை? பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முட்செடிகள் மண்டிக்கிடக்கும் மண்சாலைதான். இப்பள்ளியில் கழிப்பறை இல்லாததால் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று இயற்கை உபாதைகளை முடித்துவிட்டுத் திரும்பப் பள்ளிக்கு வருகின்றனர். ஒரு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உண்டு; ஆனால், அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதே இல்லை. பக்கத்து பள்ளியிலிருந்து தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்துச் செல்கின்றனர்; கற்றுக்கொடுப்பதில்லை. பள்ளி நிலைமைகளைப் பற்றி ஊடகங்களுக்குச் சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு மேலதி

காரிகள் அறிவுறுத்துகின்றனர். “வகுப்பறைகள் கூடுதலாகத் தேவை என எழுதினால் நிதி இல்லை” என்கின்றனர். “கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

தலைமை ஆசிரியர்களே பல பள்ளிகளுக்குக் கிடையாது. ‘நோடல் ஆபீஸர்’ எல்லாவற்றையும் வந்து பார்த்துச் சொல்கிறார். இவரே தலைமைஆசிரியர் போல் செயல்படுகிறார். மொத்த மாணவர்களில் 50 அல்லது 60 சதவீத மாணவர்கள்தாம் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். அதிலும் சிறுபான்மை மக்கள்வசிக்கும்பகுதிகள் மிகவும் பரிதாபகரமாக உள்ளன.யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உ.பி. பாஜக அரசில், ஏழைப் பெற்றோர்கள் பல்வேறு வாழ்க்கைச் செலவினங்களைக்குறைத்துக் கொண்டு, தங்கள் பிள்ளைகளை, குறிப்பாகப் பெண்களை, பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதி இல்லாததால்சிறுநீர் தொற்று வியாதி வருவதைத் தவிர்ப்பதற்காகத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறு வழியின்றி அரசுப்பள்ளியில் படிக்கும் இம்மாணவர்கள், கழிப்பறை வசதியில்லாததால் பக்கத்து வீட்டில்தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும்அவலநிலை யில் உள்ளனர்.

மத்தியப்பிரதேசமும்ஒட்டுமொத்த சீரழிவும்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியை ஆய்வு செய்தபோது, இரண்டு வகுப்பறைகளில் ஐந்து ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். இந்தப் பள்ளி மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலிலிருந்து 40 கி.மீ. தூரத்தில்தான் இருந்தது. காரணம் கேட்டதற்கு, “வீட்டிற்குச் சென்ற மாண வர்கள் மீண்டும் திரும்பவே இல்லை” என ஆசிரியர்கள் பரிதாபமாகக் கூறினர். ஊராட்சி மன்ற மும் சமுதாயக்கூடமும் இப்பள்ளியிலேயே இணைந்துள்ளன. மழைக்காலங்களில் சுவர் முழுவதும் மழைநீரால் நனைந்துகொண்டே இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிப்பறைதான். எட்டு வகுப்புகளுக்கு மூன்று வகுப்பறைகள். பழுதடைந்த வகுப்பறைகள் பழுதுபார்க்கப்படாமல் ஆறு மாதங்களாக இப்படி கைவிடப்பட்ட பரிதாப நிலையில் உள்ளன. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் சென்று விடுவதால், இப்படியான சாமானிய மக்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைக் கண்டுகொள்வதே இல்லை. பள்ளிகளுக்குப் பாது காப்பு இன்மையால் இரவு நேரங்களில் வகுப்பறைகளில் மது அருந்துகின்றனர்.

சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவே மதிய உணவு போடப்பட வேண்டும்; ஆனால் மூன்று மாதங்களாக அதுவும் இல்லை. இந்தப் பள்ளி மாநில வருவாய்த்துறை அமைச்சரின் தொகுதி யில் உள்ளது. இதுவே இந்த லட்சணத்தில் உள்ளது

எனில், மற்ற பள்ளிகளின் நிலை என்ன? வடமாநிலங்களில் கல்வி வளாகங்களும் கல்வித்துறையும் சீரழிந்த நிலையிலும், மோடி ஒன்றிய அரசு வெட்கமின்றிச்சொல்கிறது:“ஒரு நாட்டின் விதி என்பது, கல்வி என்கிற மகத்தான தூணை நம்பியுள்ளது.”

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.