பூஞ்சோலை மக்களை வெளியேற்றாதே எம்பி, எம்எல்ஏ தலைமையில் வட்டாட்சியர்அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
7 hours before

பூஞ்சோலை மக்களை வெளியேற்றாதே எம்பி, எம்எல்ஏ தலைமையில் வட்டாட்சியர்அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

கிருஷ்ணகிரி, செப்.4 -கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் பூஞ்சோலை கிராமத்தில் நூறு ஆண்டுகள் கடந்து, பல தலைமுறைகளாக 31 குடும்பத்தினர் வீடுகள் கட்டியும் விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கும் விவசாயம் செய்து வரும் நிலங்க ளுக்கும் பட்டாக்கள் கேட்டு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும்பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை பட்டாக்கள் வழங்கப்படவில்லை. பல வீடுகளுக்கு மின்விளக்குவசதிகளும் செய்யப்பட்டுள்ளது, வரியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூஞ்சோலை மக்கள் வாழும், விவசாயம் செய்துவரும் பகுதியை அழித்து வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு என்று கூறி அதிகாரிகள் மண் பரிசோதனை நடத்தினர். வீடுகள், விவசாய நிலம் அனைத்திலும் இருந்து மக்களை அகற்றப் போவதாகவும் அரசுஅதிகாரிகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இதைக்கண்டித்து, அப்பகுதி மக்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடர்ந்து தங்கள் நிலத்தின் மீது வெட்ட வெளியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரனிடமும் மனு அளித்து பேசப்பட்டது. கடந்த 29ஆம் தேதிமாவட்ட ஆய்விற்குவந்த தமிழ்நாடு சுகாதாரத்துறைஅமைச்சர் அருண்ராஜ், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆகி யோரிடமும் இந்த வீடுகளுக்கும் இடத்திற்கும் பட்டா கேட்டு மனு அளித்துவலியுறுத்தப்பட்டது. அமைச்சர்கள் இருவரும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

இரு நாட்கள் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதா பூஞ்சோலை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.ஆனால் அதன் பிறகும் இங்குள்ள மாவட்ட, வட்ட நிர்வாகம் பூஞ்சோலை மக்களை வீட்டை,நிலத்தை விட்டு வெளியேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். மேலும், போராட்டம் நடத்தி வரும் மக்களை மிரட்டியும் வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து 13 ஆம் நாளாக தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்தி வரும்பூஞ்சோலை மக்கள் கோரிக் கைக்கு ஆதரவாக இன்று அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் சார்பாக மாவட்ட பொருளாளர் குமாரவடிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாவட்ட செய லாளர் சி.பிரகாஷ், தலைவர் முருகேஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஆர்.நடராஜன்உள்ளிட்டோர் பேசினர்.

கட்சியின் அஞ்செட்டி வட்ட செயலாளர் தேவராஜன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, தளி ஒன்றிய செயலாளர் அனுமப்பா, மாவட்டக்குழுஉறுப்பினர்கள் சீனிவாசன், மாதம்மா, குண்டப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் பாதிக்கப்பட்ட பூஞ்சோலை மக்கள் குழந்தைகள் குடும்பங்களுடன் பேரணியாக சென்று அஞ்செட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைதேன்கனிக்கோட்டை வட்ட ஆய்வா ளர் சாவித்திரி,வட்டாட்சியர் பாலாஜிஆகியோரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,மற்றும் மார்க்சிஸ்ட்கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக இனி அதிகாரிகள் யாரும் பூஞ்சோலைமக்களை மிரட்ட மாட்டார்கள் என்று மட்டுமே உறுதி அளித்தனர்.வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதற்கு எந்த பதிலும்அளிக்காமல் மீண்டும் மீண்டும் மழுப்பலாகவே பதில் அளித்தனர்.

கோரிக்கைகள் குறித்து தீர்வு ஏற்படாத நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி மாவட்டம் முழுதும் உள்ள இடதுசாரிஅமைப்பு கள்,மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டி, மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதா, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன்ஆகியோர் தலைமையில் பட்டா கேட்டு அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்கோரிக்கை ஏற்கப்படும் வரை நடத்தப்படும் என தலைவர்கள் அறிவித்தனர்.இந்நிலையில், காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.