எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமுஎகச, தீஒமு இரங்கல்
13 Jul 2026, 9:55 pm

எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமுஎகச, தீஒமு இரங்கல்

சென்னை, ஜூலை 13 - தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளி தோழர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புக் கள் இரங்கல் தெரிவித்துள்ளன.

தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில், நவீன தமிழ் இலக்கிய உலகில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தன் காத்திரமான படைப்புகள் மூலம் பங்களிப்புச் செய்தவர் எழுத்தாளர் பூமணி என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

“1971 இல் தாமரை இதழில் வெளி யான ‘அறுப்பு’ என்கிற சிறுகதை மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பூமணி, தொடர்ந்து சிறுகதைகள் எழுதி 53 சிறுகதைகளுடன் தன்னை ஒரு நுட்ப மான சிறுகதைப் படைப்பாளியாக நிலை நிறுத்திக் கொண்டவர். பின்னர் நாவல் களில் தன் கவனம் குவித்தார். அவரது நாவல்கள் பிறகு, வெக்கை, நைவேத்தி யம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை எனத்தொடர்ந்து வந்து அதிர்வ லைகளை ஏற்படுத்தின. தென் மாவட்டங் களின் 600 ஆண்டுகால வரலாற்றின் ஊடாகப் பயணிக்கும் அஞ்ஞாடி நாவலுக் காக அவருக்கு 2014 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

கரிசல் வட்டார இலக்கிய முன்னோடி யான கி.ராஜநாராயணனை தனது முன்னத்தி ஏர் என்று தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான வயிறுகள் நூலில் குறிப்பிட்டு “முன்னத்தி ஏர்” என்கிற சொற்பிரயோகத்தை நவீன இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தினார். அவரது ரீதி என்கிற சிறுகதைத்தொகுப்பு தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய தொகுப்பு எனலாம். ‘இத்தனை சொற்சிக்கனத்துடன் கதைகளை எழுத முடியுமா?’ என்கிற வியப்பை ஏற்படுத்திய கதைகளை அத் தொகுப்பு கொண்டிருந்தது. “என்னை இச்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமோ தயக் கமோ கிடையாது.

அதற்காக நான் வேறு எந்த இனத்தினரைப் பற்றியும் எழுதக் கூடாது என்று தடை விதிக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை கிடையாது. ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு மனுசன்” என்று சொன்னவர். எந்த இயக்கத்தோடும் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டாலும், மார்க்சி யத்தைத் தன் வாழ்க்கைக் கண்ணோட் டமாக வரித்துக்கொண்ட தமிழின் மகத்தான படைப்பாளி தோழர் பூமணிக்கு தமுஎகச தன் அஞ்சலியைச் செலுத்துகிறது” என்றும் தமுஎகச கூறியுள்ளளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் விடுத் துள்ள இரங்கல் அறிக்கையில், “பூமணி யின் “ பிறகு” நாவல் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை, மற்றும் சாதிய ஒடுக்குமுறை, வறுமை, சமூக உறவுகள் ஆகியவற்றை படம்பிடித்து காட்டியது என்றால் அவரது “வெக்கை” சாதிய அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பையும், எதிர்விணையையும் பேசி யது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. உழைக்கும் மக்களின் பாடுகளை பேசிய எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது இதயபூர்வமான அஞ்சலியை உரிய தாக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கனிமொழி - மாரி செல்வராஜ்

“தமிழின் யதார்த்தவாத புனைவெ ழுத்தின் முன்னோடியாக புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தி யவர் பூமணி என்றும், அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பா கும்” என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரி வித்துள்ளார்.

“தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாகத் தெற்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வி யலையும் அறத்தையும் பெரும் படைப்பு களாக்கிச் சாகித்திய அகாடமி விருது பெற்றவர்” என பூமணிக்கு, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு, தமுஎகச சார்பில், அதன் பொதுச்செயலாளர் களப்பிரன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவர்கள் லட்சுமி காந்தன், உதயசங்கர், மாநிலத் துணைச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.