தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுலாத் தல விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியல்

7 Oct 2026, 12:11 am
சுற்றுலாத் தல விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியல்
<p><strong>சுற்றுலாத் தல விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியல்</strong></p><p>சேலம், அக்.6-பூலாம்பட்டி காவிரி பரிசல் துறையை சுற்றுலாத் தலமாகவிரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செவ்வாயன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேருந்து நிலையம் அருகே காவிரி கரையில் உள்ள பரிசல்துறைக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வசதிகளை மேம்படுத்த கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 4 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது நுழைவுசீட்டு மையம் வழங்குமிடம் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாத்துறை விரிவாக்கத்திற்காக பூலாம்பட்டி சந்தை திடல் மற்றும் ஊராட்சி பள்ளி மைதானத்தில்நிலம் எடுக்கக்கூடாது என்றும், பேருந்து நிலையத்திற்குள் பரிசல் துறை விரிவாக்கப் பணிகளைமேற்கொள்ளக்கூடாது என்றுவலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த எடப்பாடி தாசில்தார், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.