பூக்கட்டும் பொதுமைகள்
16 May 2026, 8:11 pm
<p><strong>பூக்கட்டும் பொதுமைகள்</strong> </p><p>சரி கிடக்கட்டும் போ விடு ஒழிந்து போகட்டும் அது அப்படித்தாண்டா ஓ அப்படியா தெரியாதே... அசட்டுத்தனங்களின் அக்கறை இல்லாத பேச்சு அனாவசியங்களை பேசிப்பேசி பொத்தாம் பொது என்பது... அதுவா இதுவா எதுவென்று தடுமாறும் முயற்சிகள் தகாத பாதைகளில் முடியாத பயணங்கள்... ஆணவத்தின் பிறழல்கள் அடி சறுக்கும் நியாயங்கள் அடி மாடுகளாய்போன மானுடத்தின் நீதிகள்... அநாகரிகங்களின் சிலந்தி வலைகளையும் அவசியமின்மைகளையும் அறுத்தெரியும் போதும்... எனக்கானது உனக்கும்தான் உண்மையின் உவகையோடு உள்ளங்கள் ஒன்று சேர பூக்கும் புதிய பொதுமை... - முத்தையா மோகன் கோயம்புத்தூர்</p>
