தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகள் சங்க பொன்னி சர்க்கரை ஆலை கிளை மகாசபை கூட்டம்

15 Jul 2026, 10:58 pm
கரும்பு விவசாயிகள் சங்க பொன்னி சர்க்கரை ஆலை கிளை மகாசபை கூட்டம்
<p><strong>கரும்பு விவசாயிகள் சங்க பொன்னி சர்க்கரை ஆலை கிளை மகாசபை கூட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 15- கரும்பு விவசாயிகள் சங்க பொன்னி சர்க் கரை ஆலை கிளை மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொன்னி சர்க்கரை ஆலை கிளை பள்ளி பாளையம் ஆறாவது மகாசபை மாநாடு பள்ளிபாளையம் அடுத்துள்ள பாப்பம் பாளையம் முனியப்பன் கோவில் திருமண மண்டபத்தில் புதனன்று நடைபெற்றது. மகாசபை மாநாட்டிற்கு, சங்க ஒன்றியத் தலை வர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சே.நல்லா கவுண்டர் முன்னிலை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி. பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டை துவக்கி வைத்து கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பௌத்ராஜ் பேசினார். வரவு - செலவு அறிக்கை முன்வைக்கப்பட்டு விவா தம் நடைபெற்றது. இதில், பொன்னி நிர்வாகம் கரும்புக்கு தீ வைப்பதை நிறுத்த வேண்டும். பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புகளுக்கு வெட்டு கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவராக நடேசன், செயலாளராக சே.நல்லாக் கவுண் டர், பொருளாளராக முத்துசாமி உள்ளிட்ட 30 பேர் கொண்ட ஒன்றிய கமிட்டி அமைக்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.