மாற்று இடத்தில் குடியமர்த்துவதை எதிர்த்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
24 Jun 2026, 1:23 am
<p><strong>மாற்று இடத்தில் குடியமர்த்துவதை எதிர்த்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 23- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குன்னம்ஞ்சேரி, ஆலாடு உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள், தங்களை அதே பகுதியில் குடியமர்த்த வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 22) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இப்பகுதிகளில் கடந்த 60 ஆண்டு களுக்கும் மேலாக ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், நரிக்குறவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வசித்து வரும் நிலையில், ஆரணி ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் 881 வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதுடன், மாற்று இடமாக 25 கி.மீ தொலைவில் உள்ள பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் வீடுகளை ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களின் வாழ்வாதாரம், தொழில் மற்றும் குழந்தைகளின் கல்வி அனைத்தும் பொன்னேரியைச் சுற்றியே அமைந்துள்ளதால், 25 கி.மீ தள்ளிச் செல்வது தங்களைப் பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தாங்கள் வாழும் பகுதியிலேயே தங்களைக் குடியமர்த்த வேண்டும் மற்றும் அனை வருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.</p>
