20 கிராம மக்கள் பயன்படுத்தும் ஆலாடு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
6 hours before

20 கிராம மக்கள் பயன்படுத்தும் ஆலாடு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூர், நவ.28-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 27-வது வார்டுகள் வழியாக ஆலாடு, வெண்மணி நகர், சோமஞ்சேரி, கொளத்தூர், தத்த மச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையைப் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

558பி, டி40 ஆகிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் இந்த வழித்தடத்தை மாணவர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாகப் பராமரிக்கப்படாததாலும், பாதாள சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததாலும் இச்சாலை குண்டும் குழியுமாக மாறி தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து சிபிஎம் 27-வது வார்டு செயலாளர் எஸ். குணசேகரன் கூறுகையில், பொன்னேரி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், பருவமழை தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இச்சாலையை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.