பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு:வழக்கிலிருந்து பொன்முடி விடுவிப்பு!
4 Nov 2026, 10:59 pm

பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு:வழக்கிலிருந்து பொன்முடி விடுவிப்பு!

சென்னை, நவ. 4 -சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ,வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், பொன்முடிக்குஎதிராக வழக்குத் தொடா்ந்தார். இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனது பேச்சுக்கு பொன்முடி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டுள்ளார். அவரது வயது மற்றும்உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உமா ஆனந்தன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.