தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாண்லேவின் படுகுழியும் வாழ்வாதாரப் போரும்!

18 Aug 2026, 11:28 pm
பாண்லேவின் படுகுழியும் வாழ்வாதாரப் போரும்!

பாண்லேவின் படுகுழியும் வாழ்வாதாரப் போரும்!

பிரெஞ்சு கலாச்சாரமும் வர லாற்றுச் சிறப்பும் மிக்க புதுச்சேரி, கடந்த 40 ஆண்டுகால அரசியல் சீர்கேடு

களால் இன்று 'மதுச்சேரி' என்ற அவப்பெயரைச் சுமக்கிறது. இந்த அலங்கார வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பது, இம்மண்ணின் முதுகெலும்பான விவ சாயிகளின் கண்ணீர்க் கதைதான். ஆசியாவிலேயே முதன்முதலில் எட்டு மணி நேர உழைப்புரிமையை வென்றெடுத்த இம்மண்ணில், இன்று கால்நடை வளர்ப்பை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் அரங்கேறுகிறது. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த மாநிலம், இன்று வெளிமாநிலங்களின் தயவை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது எப்படி?

லாபத்தையும் 'நஷ்டம்' எனும் நாடகம்

1955-இல் தொடங்கப்பட்ட 'பாண்லே' நிறுவனம், ஒரு காலத்தில் கூட்டுறவுத் துறையின் ஆலமரமாக நின்றது. ஆனால் நிர்வாகத் திறமையின்மையும் அரசியல் சுயலாபமும் அதை ஒரு சூதாட்டக் களமாக மாற்றிவிட்டன. மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை வேண்டியவர்களைத் தாறுமாறாகத் திணித்து, நிறுவனத்தை மூழ்கடித்துள்ளனர். கிராமப்புற 109 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பாண்லே தலைமை நிறுவனத்திற்கும் கடந்த 25 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாமல் ஜனநாயகமே புதைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.230 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்நிறுவனம், பன்னீர், நெய், தயிர், ஐஸ்கிரீம் என 30-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்று லாபம் பார்த்தாலும், நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்க 'நஷ்டம்' எனும் பல்லவியைப் பாடி உழவர்களை ஏமாற்றுகிறது. கிராமப் பழமொழி போல, இந்த நிறுவனத்தை அழிப்பது அந்தக் 'கட்டுச் சோற்றுப் பெருச்சாளி'கள்தான்!

ஏட்டளவில் திட்டங்கள்;

300% உயர்ந்த தீவனம்

நகரமயமாக்கலால் புதுச்சேரியில் பாதிக்கும் மேற்பட்ட மேய்ச்சல் நிலங்கள் சுருங்கி, கால்நடைகளின் எண்ணிக்கை 70% சரிந்துள்ளது. பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள் மானியத்தில் வழங்கப்படும் என்ற முழக்கம் ஏட்டளவில்தான் நிற்கிறது. 2025-இல் குலுக்கல் முறையில் தேர்வான 500 பயனாளிகளுக்குக்கூட இன்றுவரை மாடுகள் வழங்கப்படவில்லை. மானிய விலையில் தரமான தீவனம் வழங்க வேண்டிய அரசு, பணத்தை மட்டும் ஒதுக்கிவிட்டுக் கைகழுவிவிட்டது. புல், வைக்கோல், பிண்ணாக்கு, தவிடு போன்ற தீவனங்களின் விலை 300 சதவீதம் உயர்ந்ததால், ஒரு மாட்டைப் பராமரிப்பதே உழவருக்குச் சுமையாகிவிட்டது.

பால் விலையில் பாரபட்சம்

2022 டிசம்பர் 29-க்குப் பிறகு பால் கொள்முதல் விலையை அரசு ஒரு பைசாகூட உயர்த்தவில்லை. 4.2% கொழுப்பு, 8.3% எஸ்.என்.எஃப். கொண்ட பாலுக்கு லிட்டருக்கு ரூ.37 என்ற பழைய விலைதான் இன்றும்; அதிலும் உழவருக்கு ரூ.29 முதல் ரூ.31 மட்டுமே கிடைக்கிறது. ஆனால், நுகர்வோருக்கு விற்கப்படும் பால், பால் பொருள்களின் விலை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முறை உயர்த்தப்பட்டுள்ளது. தீவன விலை விண்ணைத் தொடும்போது, உற்பத்தியாளருக்கு மட்டும் விலை உயர்த்தாமல் வஞ்சிப்பது எந்த நியாயம்? நுகர்வோருக்கு ஒரு நீதியும், உழைப்பாளிக்கு வேறொரு நீதியுமா?

காகிதத்தில் இயங்கும் கால்நடைத் துறை

ஒரு காலத்தில் புதுச்சேரியின் கால்நடை மருத்துவமனைகள், துணை மருத்துவமனைகள், ஆராய்ச்சி மையம் ஆகியவை உழவர்களுக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்தன. ஆனால் இன்று அத்துறையே காகிதத்தில்தான் இயங்குகிறது. செயற்கைக் கருவூட்டல், 'இன்றைய கன்று நாளைய பசு', தாது உப்புக் கலவை, இனம் பிரிக்கப்பட்ட உரை விந்து (Sex-sorted semen), பெண் கன்றுகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் தொழில்நுட்பம், நடமாடும் கால்நடை மருத்துவமனை, தொலைபேசி வழிச் சிகிச்சை என பட்ஜெட்டில் பட்டியலிடப்படும் திட்டங்கள் கேட்கவே பிரமிப்பாக உள்ளன. ஆனால், இவற்றைச் செயல்படுத்த மருத்துவர்கள் எங்கே? உதவியாளர்கள் எங்கே? அவசர மருந்துகள், நிதி எங்கே? பணியாளர் பற்றாக்குறையால் நடமாடும் சிகிச்சை மையங்கள் முடங்கிக் கிடக்கின்றன; மருத்துவமனைகளில் மருந்திருப்பு இல்லை. ஒரு சாதாரண சிகிச்சைக்கும் தனியார் கிளினிக்குகளை நாடி உழவர்கள் கடன்சுமையில் மூழ்குகின்றனர். இத்திட்டங்கள் வெறும் கண்துடைப்பாகவே தெரிகின்றன.

அரசியல்வாதிகளின் கைகளில் சீரழியும் கூட்டுறவுத் துறையையும், கண்ணீரில் தத்தளிக்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு அரசுக்கும் நமக்கும் உண்டு. உழவர்களின் வியர்வையைச் சுரண்டிக் குளிர்காயும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உரிமைகளை மீட்க, ஆகஸ்ட் 20 அன்று கறவை மாடுகளுடன் வீதிக்கு வரும் உழவர்களின் இப்போராட்டத்தை அரசு புறக்கணிக்க முடியாது. விவசாயிகளின் இக்குரல் — ஆட்சியாளர்களின் சிம்மாசனத்தை உலுக்கும் எச்சரிக்கை மணி!

சட்டமன்றத்தை நோக்கி உழவர் பேரணி

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பான அரசின் தொடர் அலட்சியத்தைக் கண்டித்து, 20.8.2026 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குப் புதுவை அண்ணாசாலையிலிருந்து புறப்படும் வாழ்வாதார மீட்புப் பேரணி, சட்டமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமாக நிறைவடையும்.

சங்கத்தின் முக்கியக் கோரிக்கைகள்:பால் கொள்முதல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.60 ஆக உயர்த்த வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுதோறும் பால் விலையைத் திருத்த வேண்டும்.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

சங்க உறுப்பினர்களுக்குப் பசும்புல், தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும்.

2025-இல் தேர்வான 500 பயனாளிகளுக்கும் உடனடியாக மாடுகள் வழங்க வேண்டும்.

வெளிமாநிலப் பால் கொள்முதலை நிறுத்தி, உள்ளூர் உற்பத்தியைப் பெருக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

25 ஆண்டுகளாக முடக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்.

பிரதம சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 25 ஆண்டுகால பங்கு ஈவுத்தொகையை வட்டியுடன் தர வேண்டும்.

கிராமச் சங்கங்களுக்குக் கால்நடை மருத்துவர்கள் வருகையை உறுதிசெய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.