பொங்கல் விளையாட்டு விழா
20 Jan 2026, 2:46 pm
<p><strong>பொங்கல் விளையாட்டு விழா</strong></p>
<p>மானாமதுரை, ஜன.20- மானாமதுரை அருகேயுள்ள பீசர்பட்டினத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றன. ஹார்ட்ஃபுல்னெஸ் தியான நிறு வனம் மற்றும் செர்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சிக்கு செர்டு தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் எல்.பாண்டி தலைமை வகித்து, விளை யாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், செர்டு இயக்குநர் எல்.பாண்டி ஆகியோர் பரிசுகளை வழங்கி னர். இதில் நிர்வாகிகள் டாக்டர் முத்துராமலிங்கம், பொ. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
