பொங்கல் விளையாட்டு போட்டிகள்
12 Jan 2026, 5:44 pm
<p><strong>பொங்கல் விளையாட்டு போட்டிகள்</strong></p>
<p>கோவை, ஜன.12- பாலர் பூங்கா மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் சவுரிபாளையத்தில் பொங் கல் விளையாட்டு போட்டி கள் மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. கோவை மாவட்டம், சௌரிபாளையம் மாரியம் மன் கோவில் திடலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலர் பூங்கா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சனியன்று மாலை முதல் ஞாயிறன்று இரவு வரை நடைபெற்றது. பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எம்.ஜி.மோஹிதாஸ்ரீ வரவேற்றார். இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு போட்டிகளில் சிறுவர்கள் ஆர்வமு டன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாலர் பூங்கா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.உஷா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.என்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிங்கை நகரக்குழு செயலா ளர் ஆர்.மூர்த்தி, மாற்று திறனாளிகள் அரங்க பொறுப்பாளர் எம்.மணிபாரதி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மேரி, சிங்கை நகரத் தலைவர் ஏ.ரெனீத், செயலாளர் எம். தியாகு ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த் திப் பேசினர். நிறைவாக வாலிபர் சங்க கிளைச் செயலாளர் கே.சஞ்ஜய் நன்றி கூறினார். சேலம் சேலம் மாவட்டம், கொங்கணாபும் யூனி யன் தங்காயூரில் திமுக சார்பில் மாவட்ட அள விலான கபடிப் போட்டி திங்களன்று நடை பெற்றது. இப்போட்டியை சேலம் நாடா ளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி துவக்கி வைத்தார். இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.</p>
