தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 Jan 2026, 6:02 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்

சென்னை, ஜன. 12 - பொங்கலையொட்டி சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன் பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள் குறித்த தகவலை தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள் ளது. வழக்கமாக இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன், பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பேருந்துகளும் ஜனவரி 9 முதல் இயக்கப்பட்டு வருகின்றன. 2026 பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு, பொதுமக்கள் தங் களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 34,087 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. ஜனவரி 12 முதல் 14 வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றா ண்டு பேருந்து முனையத்தில் 10  முன்பதிவு மையங்களும், சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி ஆர் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப் பட்டுள்ளன. tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மற்றும் Whatsapp Number 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், முன்பதிவு செய்யும் பயணிகளின் வச திக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே Know your Bus என்ற வசதி மூலம் அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 9 முதல் 11-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளின் மூலம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

56 தொகுதி  கேட்கவில்லை! கூட்டணி ஆட்சி என சொல்லவில்லை! நயினார் நாகேந்திரன் பல்டி

மதுரை, ஜன. 12 - தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திட லில் ஜனவரி 23 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பிரதமர்  நரேந்திர மோடி தலைமை வகிக் கிறார். இந்நிலையில், பொதுக் கூட்டம் நடைபெறும்  இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோருடன் சென்று ஆய்வுசெய்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.  அப்போது, “தமிழ கத்தில் கூட்டணி ஆட்சி  என பாஜக சொல்ல வில்லை. பாஜக 56 தொகுதி கள் மற்றும் மூன்று அமைச் சர்களை கூட்டணியில் கேட்ட தாக சொல்வதும் வதந்தி” என்று தெரிவித்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவங்கி பாஜக தலைவர்கள் பலரும் கூட்டணி ஆட்சி தான் என்று கூறிவரும் நிலையில், இல்லவே இல்லை என்று நயினார் நாகேந்திரன் பல்டி அடித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.