முந்தய பக்கம்

பொங்கல் பரிசுத்தொகை? அமைச்சர் விளக்கம்

3 Jan 2026, 2:20 pm
பொங்கல் பரிசுத்தொகை? அமைச்சர் விளக்கம்
<p><strong>பொங்கல் பரிசுத்தொகை? அமைச்சர் விளக்கம்</strong></p> <p>கோபி, ஜன.3- பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அமைச் சர் சு.முத்துசாமி விளக்கமளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் நகராட்சியில் ரூ.2 கோடியே 64 &nbsp;லட்சம் மதிப்பீட்டில், புதிய மலர் சந்தை &nbsp;வணிக வளாகம் கட்டும் பணியை வீட்டு &nbsp;வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் சனியன்று துவக்கி வைத்தனர். இதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி, திமுக மகளிர் மநாட்டிற்கு பணம், வேட்டி - சேலை கொடுத்து அழைத்து வந்ததாக முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கை யில், மகளிர் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ஒவ்வொரு பெண்ணும் காலையில் 9 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர். மகளிர் மநாட்டில் பங்கேற்க வேண் டும் என 100 கி.மீ., பயணம் செய்து &nbsp;திமுக அரசின் மீது உள்ள அக்கறை யால் 2 லட்சம் மகளிர் வந்திருந்தனர். உணவே வழங்காமல் இருந்திருந்தா லும் கூட மகளிர் மாநாட்டில் பங்கேற்க வந்திருப்பார்கள், என்றார். மேலும், &nbsp;அனைவரும் எங்களை தான் (திமுக &nbsp;அரசைதான்) தாக்குகிறார்கள். எங்கள் &nbsp;மீது கல் எறிகிறார்கள். கல் விழுவதை பற்றி கவலைப்படவில்லை. மக்க ளுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறோம். பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலை வரின் கருத்திற்கு, கொரோனா காலத் தில் பொதுமக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் வலியுறுத்தி னார். ஆனால், வழங்கவில்லை. பொங் கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram