தீக்கதிர் முக்கிய செய்திகள்
30 Dec 2025, 4:07 pm

பொங்கல் பரிசுத் தொகுப்பு; அரிசி, சர்க்கரை ஒதுக்கீடு!

சென்னை: அறுவடைத் திருநாளான பொங்கலைக் கொண்டாடும்வகையில், ரேசன் கடைகள் மூலம், வேட்டி - சேலை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றைக் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. ரூ. 1000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கு தமிழகத்தில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகளும் நிறை வடைந்துள்ளன. 1.77 கோடி வேட்டிகளும், 1.77 கோடி சேலை களும் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றில் 85 சதவிகிதம் ரேசன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.இவை தவிர, ரொக்கம் மற்றும் கரும்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.

ஒன்றிய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழ் நாட்டில் பேருந்து விபத் துக்களை தடுக்கும் வகையில், அனைத்துப் பேருந்துகளின் தகு தியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரி வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நான்கு வா ரங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. போக்கு வரத்து விதிகள் முறை யாக பின்பற்றப்படாமல் போலி வாகன பதிவு கார ணமாக அதிகமான விபத்துகள் நடைபெறுவ தாக மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு இராமநாதபுரம்: இலங்கை கடற்படை யால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீன வர்கள் மூன்று பேருக்கு ஜனவரி 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மூன்று பேரையும் நீதிமன்ற காவ லில் யாழ்ப்பாணம் சிறை யில் அடைக்க ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

குரூப்-2, 2ஏ தேர்வு: ஜன.2 வரை அவகாசம்

சென்னை: குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும், சான்றிதழ்கள் பதி வேற்றம் செய்வதற்கும் ஜனவரி 2 வரை அவ காசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 766 விண்ணப்பதா ரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத் தாததால் ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 113 மாற்றுத் திறனாளி விண்ணப்பதா ரர்கள் உரிய சான்றி தழை பதிவேற்றம் செய்ய வும் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது என தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரி வித்துள்ளது. தற்காலிக மாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வுக் கட்ட ணம் செலுத்தவும், உரிய சான்றிதழை பதிவேற்ற வும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.