தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Jan 2026, 2:42 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு:  ஊழியர்களுக்கு அமைச்சர் பாராட்டு!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி, 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6687.51 கோடி பொங்கல் ரொக்கப் பரிசு, ரூ. 248.66 கோடி  மதிப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு  நீளக் கரும்பு, ரூ. 668.12 கோடி செலவில் வேட்டி - சேலை ஆகி யவை கூட்டுறவுத்துறை சார்பில் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இதற்காக கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு, அத்துறை யின் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பாராட்டு தெரிவித் துள்ளார். 2.15 கோடி பயனாளர்களுக்கு, ரூ. 6453.54 கோடி  ரொக்கப் பரிசை இந்தியாவிலேயே குறுகிய நாட்களுக்குள் 97 சதவிகிதம் வழங்கியது தமிழக கூட்டுறவுத்துறை தான். இப்பெருமைக்கும் சாதனைக்கும் அயராது பணிகளை மேற்கொண்ட இத்துறையின் அலுவலர்கள் மற்றும் பணியா ளர்களுடன் தானும் மகிழ்வதோடு, அவர்களை பாராட்டு வதாகவும் பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு மாதம் ரூ. 2000;  ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!

அதிமுக தேர்தல் வாக்குறுதி! சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.  சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் 17-ஆவது சட்ட மன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டிய லிட்டார். குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வும், சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கவும் குலவிளக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பெண்களுக் கும் மாதந்தோறும் ரூபாய் 2,000 உதவித்தொகை நேரடி யாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் தொடரும். கூடுதலாக ஆண்க ளுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண், பெண்  இருவருமே கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணிக்க  முடியும் என தெரிவித்தார். வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க  அம்மா இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புறங் களில் சொந்த இடமில்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும். நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு, விலையில்லாமல் வழங்கப்ப டும். ஒரே வீட்டில் வசிக்கும் மகன்கள் திருமணத்திற்குப் பின்  தனிக்குடித்தனம் சென்றால் அவர்களுக்கும் அரசே இடம் வழங்கி வீடு கட்டித் தரும் என உறுதியளித்தார். ஒன்றிய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்  தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் இது 150 நாட்களாக உயர்த்தப்படும் எனத்  தெரிவித்தார். சுமார் 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூபாய் 25,000 மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.

ஜன. 23 - மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதி கள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளி லிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஜனவரி 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங் களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23 அன்று கடலோர  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.  மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதி காலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

திமுக திட்டங்களை  காப்பியடிக்கும் பழனிசாமி அமைச்சர்கள் எஸ். ரகுபதி, டி.ஆர்.பி. ராஜா காட்டம்

சென்னை, ஜன. 17 - திமுக அரசின் சாதனைத் திட்டங்களை காப்பியடித்து தேர்தல்  வாக்குறுதிகளாக வழங்கியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி யுள்ளார்.  அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித் துள்ள பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2000 ரூபாய், ஆண்களுக்கு  கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்துள்ளார்; கலைஞர்  உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் திட்டம், கலைஞர்  கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக மறைமுகமாக நற்சான்றிதழ் வழங்கியுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறி யுள்ளார். புதிதாக எதையும் வாக்குறுதியாக தர இயலாத நிலைக்கு சென்றுவிட்ட பழனிசாமி திமுக திட்டங்களை காப்பி  பேஸ்ட் செய்து வாக்குறுதியாக அறிவித்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தார். “திமுக அரசின் பழைய திட்டங்களை நகலெடுத்து அறிவிப்பு களை வெளியிடுகிறது அதிமுக!” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும்  விமர்சித்துள்ளார்.  “கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்களை நகலெடுத்து அறிவிப்பு வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. 2021-ல் திமுக தேர்தல் அறிக்கையை செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியதை நினைவு படுத்திய அவர், அதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார். எனவே, புதிதாக  எதுவும் சிந்திக்க திறனில்லாமல் திமுக அரசின் திட்டங்கள் மீது  ஸ்டிக்கர் ஒட்டும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக!” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சாடியுள்ளார்.

‘ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்புடையது அல்ல’

இயக்குநர் அமீர் பேட்டி மதுரை: மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இயக்கு நரும், நடிகருமான அமீர், “தேர்தல் நேரத் தில் அறிவிக்கப்படும் உதவித்திட்டங்கள், நலத்திட்டங்கள், அறிக்கைகளை எல்லாம் நாம் ஏற்க முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது ஏற்புடையது அல்ல. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கப்பட்டதற்கான கார ணம், பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கக் கூடியவர்களாக வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது, பேருந்து செல வுக்கு பயந்து வெளியே செல்லாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்  என்று சொல்வது என்னைப் பொறுத்த வரை அவசியமற்றது” என்றார்.

பாஜக வைத்துள்ள பேனருக்கும்  கூட்டணிக்கும் சம்பந்தமில்லை!

சென்னை, ஜன. 17 - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.  தினகரன் கூட்டணி தொடர்பான அறி விப்பை இதுவரை வெளியிடவில்லை. எனினும், மதுராந்தகத்தில் ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கான வர வேற்பு பதாகையில் டி.டி.வி. தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்துவிட்டதா? என்ற  கேள்வி எழுந்தது. இதுகுறித்து சென்னை யில் டி.டி.வி.தினகரனிடம் செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “பதாகை யில் எனது புகைப்படத்தை யாரோ ஆர்வத் தில் வைத்திருக்கிறார்கள். இது குறித்து  வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும்  என்பதை உரிய நேரத்தில் உரியவர்கள் அறிவிப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி யும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி  அமைக்க முடியாது என்று நான் நம்பு கிறேன். எனவே நிச்சயமாக கூட்டணி ஆட்சி தான் வரும். அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். கூட்டணிக்கு நான் தலைமை தாங்கி னால் நான் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். ஆனால் இன்னொரு கூட்டணியில் நான் சேர்கின்றபோது அந்த  கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் அதை வெளிப்படையாக அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

தருமபுரி வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு

தர்மபுரி, ஜன.17- பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் 10 வயது  மதிக்கத்தக்க ஆண்  சிறுத்தை உயிரிழந்த நிலையில் காணப்பட் டது.  கடந்த புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடு பட்ட வனத்துறை அலுவ லர்கள் சிறுத்தையின் உடலைக் கண்டெடுத்த னர். உடற்கூராய்வில் சிறுத்தையின் வலது கழுத்து எலும்பு முறிந் திருந்தது தெரியவந்தது. மாதிரிகள் சேகரிக்கப் பட்டு வண்டலூர் தடய  ஆய்வகத்திற்கு பகுப் பாய்வுக்கு அனுப்பப்பட் டுள்ளன. மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தை குறித்து வனத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.