ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு</strong></p>
<p>ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.8- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத் தொகை, இலவச வேட்டி–சேலை, கரும்பு, சீனி, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் வியாழக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்க ளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 5, அய்யம்பட்டி தெருவில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் வழங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் ஜெய லட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நிர்மல் குமார், குடிமைப் பொருள் வருவாய் ஆய்வா ளர் பொன்னரசன், விற்பனையாளர் நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மம்சாபுரம் பேரூராட்சியில், மம்சாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 8 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தங்கமாங்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகு ப்பை வழங்கினார். உடன் பேரூராட்சி செயலா ளர் உதயசூரியன், கடை விற்பனையாளர்கள் வீரமணி, ரேணுகா, செண்பகவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு வட்டத்தில், கியூ1114 வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வத்திரா யிருப்பு நியாயவிலை கடை எண் 4-ல் நடை பெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் திருவில்லி புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டி. ராமசாமி தலைமையில், முன்னாள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எம்.சிந்துமுருகன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் என்.கோவிந்தன், விருதுநகர் கூட்டுறவு துணைப் பதிவாளர் எஸ்.கோடீஸ்வரி, வத்திரா யிருப்பு தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) எம். ரங்க சாமி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், தனி அலுவலர் ச.ராஜா, கள அலுவலர் ஆர்.எம்.ராஜலட்சுமி, பண்டகசாலை மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
