பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்</strong></p>
<p>கோவை, ஜன.8- கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ் குமார் ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலை மற்றும் 3,000 ரூபாய் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங் கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மாநிலம் முழுவதும் தொடங்கி யுள்ளது. சென்னையில் முதல்வர் இத் திட்டத்தை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்க ளிலும் விநியோகப் பணிகள் நடை பெற்று வருகின்றன. அதன்படி, கோவை வடகோவை பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் கணபதி பி.ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர். இந்நிகழ் வில் கோவை மாநகராட்சி ஆணையா ளர் மா. சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்க நாயகி மற்றும் துணை மேயர் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்தொடர்ச்சியாக உடையாம் பாளையத்தில் பொங்கல் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியினை மார்க்சிஸ்ட் கட்சியின் 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, திமுக நிர்வாகி எல்.சி.முத்துசாமி உள்ளிட் டோர் துவக்கி வைத்தனர். ஈரோடு ஈரோடு மாநகராட்சி, மாணிக்கம் பாளையம், திண்டல், வேப்பம்பாளை யம், நசியனூர் நஞ்சனாபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி வியாழனன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வரு வாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
