புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு!
10 Dec 2025, 8:40 am
<p>புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.<br />
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில், அரிசி, நெய், வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. <br />
இந்த பொங்கல் தொகுப்பு, ஜன.3-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் அட்டைதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.<br />
</p>
