தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொங்கல் பண்டிகை:  தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

4 Jan 2026, 4:05 pm
பொங்கல் பண்டிகை:  தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
<p><strong>பொங்கல் பண்டிகை: &nbsp;தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்</strong></p> <p>சென்னை, ஜன.4 - பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் &nbsp;இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. &nbsp;நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் &nbsp;செல்லும் சிறப்பு ரயில் ஜன.11 மற்றும் 18 &nbsp;ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு &nbsp;புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 &nbsp;மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் ஜன.12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த &nbsp;நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோ வில் சென்றடையும். கன்னியாகுமரியில் இருந்து தாம்ப ரம் செல்லும் சிறப்பு ரயில் ஜன.13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 &nbsp;மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்ற டையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் ஜன.14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 &nbsp;மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். திருநெல்வேலியில் இருந்து செங்கல் பட்டு செல்லும் சிறப்பு ரயில் ஜன.9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை &nbsp;3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் &nbsp;மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி &nbsp;செல்லும் சிறப்பு ரயில் ஜன.9 மற்றும் 16 &nbsp;ஆகிய தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதி காலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்து &nbsp;சேரும். கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் ஜன.11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 &nbsp;மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்ற டையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரயில் ஜன.12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு &nbsp;புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 &nbsp;மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேரும். இராமேசுவரத்தில் இருந்து தாம்பரம் &nbsp;செல்லும் சிறப்பு ரயில் ஜன.13 மற்றும் &nbsp;20 ஆம் தேதிகளில் இரவு 8.15 மணிக்கு &nbsp;புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு &nbsp;ஜன. 4 அன்று முதல் தொடங்கியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.