தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நொய்யல் பண்பாட்டு அமைப்பின் பொங்கல் திருவிழா

16 Jan 2026, 3:00 pm
நொய்யல் பண்பாட்டு அமைப்பின்  பொங்கல் திருவிழா
<p><strong>நொய்யல் பண்பாட்டு அமைப்பின் &nbsp;பொங்கல் திருவிழா</strong></p> <p>திருப்பூர், ஜன.16- நொய்யல் பண்பாட்டு அமைப் பின் சார்பில் 4 ஆவது ஆண்டு திருப் பூர் பொங்கல் திருவிழா கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. நொய்யல் பண்பாட்டு அமைப் பின் சார்பில் கடந்த நான்கு ஆண்டு களாக திருப்பூரில் பொங்கல் திரு விழா கொண்டாடப்பட்டு வருகி றது. அதன் தொடர்ச்சியாக இந்த &nbsp;ஆண்டு பொங்கல் திருவிழா ராயபு ரம் ரவுண்டானா மைதானத்தில் வியாழனன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு நொய்யல் பண்பாட்டு &nbsp;அமைப்பின் தலைவர் மு.ஜீவானந் தம் தலைமை வகித்தார். செயலா ளர் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து பேசினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்தி பேசினார். உழவர்களின் உழைப்பைப் போற்றும் தமிழர்க ளின் பண்பாட்டுத் திருவிழாவை சாதி, மத பேதம் கடந்து அனைத்து மதத்தினரும் இணைந்து சமத்துவ &nbsp;பொங்கல் வைத்தனர். இதை தொடர்ந்து சமத்துவக் கும்மி, கம் பத்தாட்டம், திருப்பூர் கலைக்குழு வின் நாட்டுப்புறப் பாடல்கள், கோவை நிகர் கலைக்குழுவின் பறையிசை, கலைமாமணி பேரூர் நடராஜன் காவடியாட்டம், கவிநயா குழுவினரின் பரதநாட்டியம், திரு வண்ணாமலை பெரிய மேளம் உள் ளிட்ட கலை நிகழ்ச்சிகள் &nbsp;நடைபெற் றன. இதையடுத்து திரையிசைக் கலைஞர் பாடகர் வேல்முருகன் பங்கேற்ற இனிக்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் மற் றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பொது மக்கள் 3 ஆயிரத்திற்கும், மேற்பட் டோர் பங்கேற்றனர். முடிவில் &nbsp;அமைப்பின் துணைத் தலை வர் பி.ஆர்.நடராஜன் நன்றி கூறினார்.</p> <p>தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் &nbsp;துறை மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 22 ஆவது புத்தக &nbsp;திருவிழா ஜனவரி 24 ஆம் தேதி &nbsp;முதல் &nbsp;பிப்ரவரி 3 ஆம் தேதி வரை &nbsp;காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற உள் ளது. &nbsp;இதற்கான இலட்சினையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை &nbsp;அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். பின்னல் புக் டிரஸ்ட் நிசார் &nbsp;அகமது பெற்று கொண்டார். இந்நிகழ்வில் நொய்யல் பண்பாட்டு அமைப்பின் அறக்கட்டளை நிர்வாகிகள், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.