தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் பொங்கல் விழா - விளையாட்டுப் போட்டிகள்

16 Jan 2026, 3:00 pm
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில்  பொங்கல் விழா - விளையாட்டுப் போட்டிகள்
<p><strong>மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் &nbsp;பொங்கல் விழா - விளையாட்டுப் போட்டிகள்</strong></p> <p>அருமனை, ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் மேல் புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகளுடன் பொங்கல் விழா &nbsp;நடைபெற்றது. மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாங்கோடு, முழுக்கோடு, விளவங்கோடு,மஞ்சாலுமூடு உட்பட 10 ஊராட்சிகளில் பல்வேறு &nbsp;நிகழ்ச்சிகளுடனும் விளையாட்டுப் போட்டிகளுடனும் &nbsp;சமத்துவ பொங்கல் நடைபெற்றது. வெள் ளாங்கோடு ஊராட்சியில் பொங்கல் &nbsp;விழாவிற்கு மேற்புறம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி &nbsp;கிராம &nbsp;ஊராட்சி அலுவலர் சுப்பிரமணியம் &nbsp;தலைமையில் சிதறால் அரசு &nbsp;உயர்நிலைப் பள்ளியில் 19 பானைகளில் பொங்கல்லிடப் பட்டது. கலந்து கொண்ட மாணவ &nbsp;மாணவிகளுக்கும் பெரியோர்களுக் கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டல துணை &nbsp;வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகுமார், &nbsp;ஊராட்சி செயலர் மற்றும் விவசாய துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொல்லங்கோடு வட்டார குழு சார்பில் இ எம் எஸ் சென்ட்ர லில் தைப்பொங்கல் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் &nbsp;சங்க வட்டார குழு செயலாளர் ரமேஷ் குமார்,தலைவர் ஆனந்த போஸ், முன்னாள் நிர்வாகிகள் விஜய மோகன், சுனில் குமார், அஜி &nbsp;மற்றும் பலர் கலந்து கொண்டனர். அருமனையில் சிஐடியு, இந்திய &nbsp;ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் &nbsp;பொங்கல் விழா நடைபெற்றது. டிஒய்எப்ஐ, தமுஎகச &nbsp;மிடாலக் காடு கிளைகள் இணைந்து மிடாலக் காடு ஜங்சனில் &nbsp;சமத்துவ பொங்கல் விழாவை நடத்தின. &nbsp;இதில் சங்க &nbsp;நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற் றனர். இராஜாக்கமங்கலம் ஒன்றியம் கேசவன் புதூரில் பாலர் பூங்கா சார்பில் பொங்கல் விழா நடை பெற்றது. களியக்காவிளை நாஞ்சில் &nbsp;கத்தோலிக்க கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் பொங்கல் விழா &nbsp;நடைபெற்றது. திருவட்டார் மூவாற்றுமுகம் சந்திப் பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் தமிழ் நாடு விவ சாயிகள் சங்கத்தின்திருவட்டார் வட்டாரசெயலாளர் இராஜசேகரன் , வாலிபர் சங்கத்தின் வட்டார செய லாளர் லிபின், தலைவர் ஆதர்ஷ், &nbsp;அஜய் மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் வில்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.