தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்வு

10 Jan 2026, 2:48 pm
விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்வு
<p><strong>விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்வு</strong></p> <p>நாமக்கல், ஜன.10- பொங்கல் போனஸ் குறித்து குமாரபாளையத்தில் உள்ள கொங்கு விசைத்தறி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் விசைத்தறி &nbsp;தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் &nbsp;நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கடந்த ஆண்டு போனசுடன், 18 &nbsp;சதவீதம் சேர்த்து 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக ஒப்பந்தம் &nbsp;ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், விசைத்தறி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2025, 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து, குமாரபாளையம் கொங்கு விசைத் தறி உரிமையாளர்கள் சங்கம், &nbsp;நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு &nbsp;செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட விசைத் தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு -வுடன் இணைந்து சனியன்று குமார பாளையத்தில் உள்ள கொங்கு விசைத்தறி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி சென்ற ஆண்டு கொடுத்த 8.15 சதவீத போனசுடன், 18 சதவீதம் சேர்த்து 8.33 சதவீதம் &nbsp;போனஸ் வழங்குவதாக ஒப்பந்தம் &nbsp;ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது கொங்கு விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இந்த ஒப் பந்த உடன்படிக்கை ஏற்பட்டுள் ளது. மேலும் கடந்த ஆண்டு ஒப் பந்தத்தை காட்டிலும் ஒரு சில &nbsp;விசைத்தறிக்கூடங்களில் கூடுதல் &nbsp;சதவீதம் போனஸ் வழங்கப்பட்டி ருந்தால், அங்கேயும் வழங்கும் போனசுடன் மேலும் கூடுதலாக 18 &nbsp;சதவீதம் வழங்குவதாக விசைத் தறி நிர்வாகத்தின் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த போனஸ் பேச்சுவார்த்தை யில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். அசோகன், மாவட்டத் தலைவர் கே. மோகன், சங்க நிர்வாகிகள் பாலு சாமி, சக்திவேல், வெங்கடேசன், ஜி. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.