முந்தய பக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

1 Jan 2026, 4:14 pm
தமிழக அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனஸ் அறிவிப்பு
<p>சென்னை, ஜன. 1 - தமிழ்நாடு அரசு ஊழி யர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்க ப்பட்டுள்ளது. &nbsp;இந்த உத்தர வின்படி, &lsquo;சி&rsquo; மற்றும் &lsquo;டி&rsquo; &nbsp;பிரிவைச் சார்ந்த பணியா ளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் &nbsp;பணியாளர்கள் மற்றும் 2024-2025 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் &nbsp;பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்ப டையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் &nbsp;1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். &ldquo;சி&rdquo; மற்றும் &ldquo;டி&rdquo; பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம &nbsp;பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன டைவார்கள் என்ற நிலையில், இதற்காக 183 கோடியே 86 &nbsp;லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் &nbsp;உத்தரவிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram