முந்தய பக்கம்

கொடியம்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் ஆய்வு

2 Apr 2026, 3:50 pm
கொடியம்பாளையம் கிராமத்தில்  வாக்குச்சாவடி மையம் ஆய்வு
<p><strong>கொடியம்பாளையம் கிராமத்தில்&nbsp; வாக்குச்சாவடி மையம் ஆய்வு</strong></p> <p>மயிலாடுதுறை, ஏப். 2- &nbsp;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், கொடியம்பாளையம் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். &nbsp;சீர்காழி வட்டம், கொடியம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;பார்வையிட்டு வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தார். மொத்த வாக்காளர்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் அவர்கள் மற்றும் ஷோபனா &nbsp;ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram