வாக்குச்சாவடி மையம் ஆய்வு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>வாக்குச்சாவடி மையம் ஆய்வு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 18- அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே புதனன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருப் பூர் மாநகராட்சி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி யில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே புதனன்று பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் சாய்தள வழி, வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வச திகள் குறித்து பார்வையிட்டார். முன்னதாக, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் சுய புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
