இயந்திரக் கோளாறுகளால் புதுச்சேரியின் பல இடங்களில் வாக்குப்பதிவு காலதாமதம்
10 Apr 2026, 5:30 am

இயந்திரக் கோளாறுகளால் புதுச்சேரியின் பல இடங்களில் வாக்குப்பதிவு காலதாமதம்

புதுச்சேரி, ஏப்.9- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உருளையன்பேட்டை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் காலை 6:30 மணிக்கே வாக்காளர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், 7 மணிக்குத் தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு, இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமானது.

இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்பக் குழுவினர் வந்து இயந்திரத்தைச் சீரமைத்த பிறகு, சுமார் 35 நிமிடம் தாமதமாக 7:35 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஏனம் மற்றும் இதர பகுதிகள்: இதேபோல், புதுச்சேரி நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதமானது. ஏனம் பகுதியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், வாக்குப்பதிவு நடுவே சிறிது நேரம் தடைப்பட்டது.