தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

21 May 2026, 12:36 am
புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
<p><strong>புலிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்</strong></p><p>பொள்ளாச்சி, மே 20- பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெ டுப்பு பணிகள் துவங்கிய நிலையில், அடர்ந்த வனப் பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத் தில் 2026–27 ஆம் ஆண்டிற்கான ‘Phase III’ அனைத்து இந்தியா புலிகள் கணக்கெடுப்பு பணிகள் புதனன்று முறைப்படி தொடங்கி நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, அடர்ந்த வனப் பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வனத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்வதற்காக, கடந்த மே 18 ஆம் தேதி அட்டகட்டி வனஉயிரின பயிற்சி மையத்தில் வனத் துறை அலுவலர்கள், வனக்காவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது. இதில் புலிகள் கணக்கெடுப்பு முறைகள், புதிய தொழில்நுட்பங்கள், கேமரா டிராப் கருவி களை சரியான கோணத்தில் பொருத்தும் நடைமுறை கள், வனவிலங்குகளின் நடமாட்டத் தரவுகளை சேக ரிக்கும் முறைகள் மற்றும் காட்டு விலங்குகளின் அசைவுகளை அறிவியல் ரீதியாக கண்காணிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, புதனன்று பொள்ளாச்சி வனச்சரகத் திற்குட்பட்ட முக்கிய மற்றும் அடர்ந்த வனப்பகுதி களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விலங்குகள் அதிகம் நடமா டும் பாதைகள், நீர்நிலைகள் மற்றும் முக்கிய இடங் கள் தேர்வு செய்யப்பட்டு கேமராக்கள் நிறுவப்பட் டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட உள்ளன. சேகரிக்கப்படும் புகைப் படங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், வன விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விட நிலைமைகள் அறிவியல் பூர்வமாக மதிப் பீடு செய்யப்படும் என்று வனத்துறை தெரிவித்துள் ளது. மேலும், இந்த விரிவான கணக்கெடுப்பு பணி மூலம் வனவிலங்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், புலிகளின் வாழ்விடங்களை முறையாக பராமரிக்க வும் முக்கிய உதவியாக இருக்கும் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.