தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மும்மொழி கொள்கையை திணிக்கக்கூடாது! கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

19 Jun 2026, 12:14 am
மும்மொழி கொள்கையை திணிக்கக்கூடாது! கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>மும்மொழி கொள்கையை திணிக்கக்கூடாது! கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்</strong></p><p>பொள்ளாச்சி, ஜூன் 18- சிபிஎஸ்இ மாணவர்கள் மீது மும் மொழி கொள்கையை திணிக்கக் கூடாது என வலியுறுத்தி மாணவர் களின் கல்வி உரிமைக்கான கூட்ட மைப்பு சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 தேர்வுத் தாள் திருத்தும் புதிய நடை முறையை திரும்பப்பெற வேண் டும். சிபிஎஸ்இ மாணவர்கள் மீது மும்மொழி கொள்கையை திணிக்கக் கூடாது. உயர் சிறப்பு மருத்துவ கல்வியில் தமிழ்நாடு மாநில சிறப்பு இடங்களை தட்டி பறிக்கக் கூடாது. ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கின்ற ஒன்றிய அர சின் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழ னன்று மாணவர்களின் கல்வி உரி மைகளுக்கான கூட்டமைப்பு சார் பில் பொள்ளாச்சி காந்தி சிலை அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் நா.கண்ணுசாமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர், கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கலந்து கொண்டு பேசுகையில், அரசுப்பள்ளிகள் மூலமாக மட்டுமே தரமான கல்வியை மாணவர்க ளுக்கு உறுதி செய்ய முடியும். அதோடு, குழந்தைகளுக்கு கண் ணியமான வாழ்க்கையை உரு வாக்கித் தரும் வல்லமையும் அரசுப் பள்ளிகளுக்கு உள்ளது. பொள் ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், உள்ளிட்ட பல வகையான பள்ளி கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கான கட்டணங் களை தமிழ்நாடு அரசு நிர்ணயித் துள்ளது. அந்தக் கட்டண விவரங் கள் பள்ளிகளில் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இந்த விதி முறைகளை முறையாக பின்பற்று வதில்லை. இதன் விளைவாக, பெற்றோர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூ லிக்கப்படுகிறது. கல்வி என்பது வணிகப் பொருள் அல்ல; அது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையா கும், என்றார். முன்னதாக இந்த ஆர்ப்பாட் டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் கே.மகாலிங்கம், தி.செ.கோபால், இரா.மனோகரன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.