முந்தய பக்கம்

புதிய எப்எல்-2 மதுபான பாருக்கு எதிர்ப்பு!

30 Jun 2026, 12:59 am
புதிய எப்எல்-2 மதுபான பாருக்கு எதிர்ப்பு!
<p><strong>புதிய எப்எல்-2 மதுபான பாருக்கு எதிர்ப்பு!</strong> </p><p>பொள்ளாச்சி, ஜூன் 29- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஊஞ்ச வேலாம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புதிய எப்எல்-2 (FL2) மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரி டம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து மனுவில், மதுபான பார் அமைக்கப்பட உள்ள இடம் அரசு பள்ளி மற்றும் கோவிலுக்கு மிக அருகில் இருப்பதுடன், பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பொள்ளாச்சி கிழக்கு நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இப் பகுதியில் ஏற்கனவே குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இந்த புதிய மதுபான பாரால் மேலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். எனவே, பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பகுதி யில் அமைய உள்ள எப்எல்-2 மதுபான கூடத்தை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram