முந்தய பக்கம்

கே.நித்தியானந்தம் எம்.எல்.ஏ.-விற்கு வரவேற்பு

6 May 2026, 1:11 am
கே.நித்தியானந்தம் எம்.எல்.ஏ.-விற்கு வரவேற்பு
<p><strong>கே.நித்தியானந்தம் எம்.எல்.ஏ.-விற்கு வரவேற்பு</strong></p><p>பொள்ளாச்சி, மே 5- பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.நித்தியானந் தம், திங்களன்று பொள்ளாச்சி வருகை தந்தார். கோவை சாலை, சிடிசி மேடு பகுதியில் அவருக்குத் தொண்டர்கள் மற் றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி தொகுதியில் மாற்றத்தை விரும்பி மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இத்தொகுதியில் நிலவி வந்த தேக்க நிலையை மாற்றி, நகரம் மற்றும் ஊராட்சி களில் தங்குதடையின்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படும். அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது; எங்களின் இலக்கு மக்கள் பணி மட்டுமே. வரும் உள்ளாட்சித் தேர்தலி லும் எங்களது கூட்டணி மகத்தான வெற்றி பெறும்,என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram