தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுப்பள்ளியின் பவள விழாவில் திரண்ட முன்னாள் மாணவர்கள்

29 Jun 2026, 12:36 am
அரசுப்பள்ளியின் பவள விழாவில் திரண்ட முன்னாள் மாணவர்கள்
<p><strong>அரசுப்பள்ளியின் பவள விழாவில் திரண்ட முன்னாள் மாணவர்கள்</strong></p><p>பொள்ளாச்சி, ஜூன் 28- கோட்டூர், மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு பவள விழாவில், முன் னாள் மாணவர்கள் இணைந்து ரூ.75 லட்சம் செலவில் சேதம டைந்த பள்ளிக் கட்டிடங்களை புதுப்பித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோட்டூர், மலை யாண்டிபட்டினம் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால், பள்ளி யில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.75 லட்சம் செலவில் பள்ளியை புனரமைப்பு செய்தனர். இந்நிலை யில், ஞாயிறன்று பள்ளியின் பவள விழா கொண்டாடப்பட் டது. இந்த விழாவில் கடந்த 75 ஆண்டுகளில் படித்த முன் னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியில் பணியாற்றிய ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு துறையில் பணியாற்றி வந்தாலும், தற்போது நடந்த விழாவில் படித்த பள்ளியில் உடன் படித்தவர்களையும், தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தங்கள் குடும்பத்தையும், பழைய நினைவுகளையும் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர். மேலும், தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்திற்கு சென்று நாற்காலியில் அமர்ந்து பழைய நினைவுகளை பகிர்ந்து, புகைப்படங்களை எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத் தியது அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.