கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
1 Jul 2026, 1:22 am

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூன் 30- கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர். பொள்ளாச்சியில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்பேசுகையில், பிஏபி கால் வாய்களின் அருகே நிலங்களை வாங்கி, அங்கிருந்து முறைகேடாக குழாய்கள் பதித்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் சம்பவங் கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. உடனடி ஆய்வு செய்து முறை கேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். அணைகளில் இருந்து கால்வாய் களுக்கு குழாய் மூலம் பாசன நீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து விவ சாயிகள் மற்றும் விவசாய அமைப்பு களுடன் ஆலோசனை நடத்தி, அவர்க ளின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னர். இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி பேசுகையில், மின் இணைப்புக்காக தட்கல் முறை யில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேவம்படி வலசு, கோதவாடி குளங்கள் மற்றும் ராம பட்டிணம் சின்ன அணை, பெரிய அணை கால்வாய்களை தூர்வார வேண்டும். கடும் வறட்சி நிலவுவதால் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ண சாமி, கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து நீர் எடுத்துச் செல்லப் படுவது மற்றும் கால்வாய்கள் ஆக்கிர மிக்கப்பட்டது, தொடர்பான புகார்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று உறுதியளித்தார்.