தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

13 hours before
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி, அக்.30-தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக வாரந்தோறும் வெள்ளியன்று நடைபெறும் மருத்துவச் சான்றிதழ் மற்றும் யு.டி.ஐ.டி அட்டை பெறுவதற்கான முகாம்

எந்த முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும்

மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைகின்றனர், அலைக்கழிக்கப்படு கின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வாராந்திர மருத்துவ முகாமை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நிறைவேற்றப்படாதபட்சத்தில் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.

மேலும், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளும் அவர்களது துணையாளரும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைக்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் கடந்த ஒரு வாரகாலமாகதொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்குபோராடிய சங்கத்தினருக்கும், அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.மகாலிங்கம் கோரிக்கைகள் குறித்த உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி, விதொச மாவட்ட பொருளாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி,தவிச நிர்வாகி ஸ்டாலின் பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், செல்வராஜ் நன்றி கூறினார். இதில்திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.