பொள்ளாச்சி சிபிஎம் அலுவலக திறப்புவிழா பெ.சண்முகம் பங்கேற்று திறந்துவைத்தார்
1 hour before

பொள்ளாச்சி சிபிஎம் அலுவலக திறப்புவிழா பெ.சண்முகம் பங்கேற்று திறந்துவைத்தார்

பொள்ளாச்சி, அக்.18-பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தாலுகா குழு அலுவலக திறப்பு விழா மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு அலுவலகமான பொதுவுடைமை தியாகிகள்நினைவகம் பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய கட்சி அலுவலக திறப்பு விழா சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கட்சிக்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிசாமி ஏற்றினார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அலுவலக கல்வெட்டை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் தலைவர்களின் படத்தை பொள்ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர்.

முன்னதாக, கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆச்சிப்பட்டி கிளை மூத்த உறுப்பினர் ஆர். லோகநாதன் வரவேற்றார். இதில், தாலுகா குழு உறுப்பினர்கள் வி.பாலகுருசாமி, பி.ஆனந்தராஜ், பி.சங்கர் கணேஷ், ஸ்டாலின் பழனிச்சாமி, எம்.அங்கமுத்து, டி.விஜயா, எம்.அப்பாவு, எஸ்.மாதீஸ்வரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உள்ளிட்டதிரளானோர் பங்கேற்றனர்.