'அட்லஸ்' தெரியாத அரசியல்!
2 Apr 2026, 5:30 am

'அட்லஸ்' தெரியாத அரசியல்!

த.வெ.க-வின் கடிதப் படலமும்... சிரிப்பாய் சிரிக்கும் நிர்வாகமும்! சினிமாவில் ஒரு காட்சியை ரீ-மேக் சிவன்கிச் சரிசெய்யதுவிடலாம். ஆனால் அரசியலில் ஒவ்வொரு அடியும் 'வைல்ட் எண்ட்ரி' என்பதை தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

முன்னாள் செயலாளருக்கு இன்னாள் கடிதம்! ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவதில் ஒரு அடிப்படை நாகரீகம் இருக்கிறது. தற்போது பதவியில் யார் இருக்கிறார் என்ற குறைந்த பட்ச தேடல் கூட இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியிழந்த, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத் த.வெ.க தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

'ஜி... உங்ககிட்ட ஒரு லெட்டர் கொடுக்கணும்' என்று சொல்லி, சம்பந்தமே இல்லாத ஒருவருக்குக் கடிதம் அனுப்பியிருப்பது, இவர்களின் 'நிர்வாகத் திறமையை' அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனால் தலைமைப் பொறுப்போம் தகவலைக் கூடச் சரிபார்க்காத இவர்கள், ஒரு மாநிலத்தையே எப்படி வழிநடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வித்தியாசம் தெரியாத 'தளபதி' படை! சட்டமன்றத் தேர்தலை நடத்துவது யார், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது யார் என்ற அடிப்படைக் கல்வி கூட த.வெ.க-வுக்குப் பிடிபடவில்லை போலிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி விடுக்கக் கோரி, மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு (CEO) கடிதம் எழுதுவதற்குப் பதிலாக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு (SEC) கடிதம் எழுதியுள்ளனர். இது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதி கேட்டு, எல்.கே.ஜி வகுப்பு ஆசிரியரிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பாதுகுப்புப் புள்ளிக்கும் மணிப்பூர் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத 'தளபதி' படை! விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு இருந்தும், பிரச்சாரத்தில் பாதுகாப்பு இல்லை என்று புகார் வாசிக்கிறார்கள். ஆனால் அந்தப் புகாரிலும் மணிப்பூர் ஆளுநர் பெயரைப் போட்டுக் குளறுபடி செய்திருப்பதுதான் 'அதிர்ச்சி ரகம்'. த.வெ.க-வின் விஷயத்தில் 'அரசியல் பிழைத்தோர்க்கு 'அட்லஸ்' கூற்றாகும்' போலிருக்கிறது.