அரசியல் என்பது மக்களின் வலியை உணர்வது, விஜய் அவர்களே! - அ. ராதிகா
24 Feb 2026, 3:55 pm
<p><strong>அரசியல் என்பது மக்களின் வலியை உணர்வது, விஜய் அவர்களே! </strong></p>
<p>“கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டார்கள்” என்ற விஜய்யின் வேலூர் பேச்சு, இன்றைய அரசி யல் சூழலில் ஒரு தலை வரின் மனநிலை, பொறுப் புணர்வு மற்றும் தொண்டர்கள் மீதான அக்கறை எவ்வளவு குறைந்துள்ளது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. மறக்க முடியாத கரூர் பேரவலம் கரூரில் நடந்தது ஒரு சாதாரணச் சம்பவமல்ல; அது ஒரு பேரவலம். ஒரு அரசியல் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 மனித உயிர்கள் பறிபோயின. 41 குடும்பங்களின் கனவுகள், உழைப்பு, எதிர்காலம் என அனைத்தும் சிதைந்து போயுள்ளன. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு, ஒரு கட்சியின் தலைவரால் எப்படி இவ்வளவு அலட்சியமாகப் பேச முடிகிறது? மனித மனங்களை நொறுக்கிய ஒரு சம்பவத்தில், ஓர் அரசியல் தலைவர் எவ்வளவு பண்பட்டவராகப் பேசியிருக்க வேண்டும்? “என்னுடைய தவறே இல்லையென்றாலும், நடந்தது என்னை உறுத்துகிறது; இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காதிருக்க நான் பொறுப்பேற்கிறேன்” என்று சொல்வதுதான் ஒரு முதிர்ந்த தலைவருக்கு அழகு. ஆனால், அதற்கு மாறாக விஜய் சொல்வது “என் மீது பழி போட்டார்கள்” என்பதுதான். இந்த வார்த்தைகளில் வருத்தமும் இல்லை, குற்ற உணர்வும் இல்லை, சக மனிதனின் வலி குறித்த புரிதலும் இல்லை. அரசியல் ஒழுக்கமும் பொறுப்புணர்வும் பொறுப்பு என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல; அது ஓர் அரசியல் ஒழுக்கம். ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தால், அதில் வரும் மக்களின் பாதுகாப்பு, நெரிசல் மேலாண்மை, அவசர மருத்துவ வசதி, நிர்வாக ஒருங்கிணைப்பு என அனைத்து க்கும் அந்தக் கட்சியின் தலைமைதான் முதன்மைப் பொறுப்பாளி. “நான் நேரடி யாகக் காரணமில்லை” என்று சட்ட ரீதியாக வாதிடலாம். ஆனால் அரசியல் ரீதியாகவும், அற நெறி ரீதியாகவும் அந்த வாதம் ஏற்புடையதல்ல. தன் கட்சித் தொண்டர் இறந்தால், அந்த மரணத்தைப் பற்றித் தலைவர் குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டாமா?. அதுவே அந்தத் தொண்டர் தன் வாழ்நாளெல்லாம் அந்தக் கட்சிக்காக உழைத்ததற்குக் காட்டும் மரியாதை. அந்தச் சிறு மரியாதையைக் கூடச் செய்யாத நீங்கள், எத்தகைய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறீர்கள்? திரை பிம்பமும் அரசியல் தகுதியும் திரையில் ஹீரோவாக நடிப்பது, கையில் பணம் இருப்பது, பெரிய கூட்டத்தைச் சேர்க்க முடிவது இவையெல்லாம் அரசியல் தகுதியாகிவிடாது. அரசியல் என்பது மக்களின் வலியை உணர்வது; தவறு நடந்தால் பொறுப்பேற்கும் துணிச்சல் கொண்டிருப்பது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் தலைமை தாங்கும் கட்சியின் தொண்டர்களைப் பாதுகாக்கும் பண்பு வேண்டும். அதை விடுத்து, “என்னைச் சாடிப் பழி போடுகிறார்கள்” என்று பேசுவது ஒரு ஆபத்தான அரசியல் முன்னுதாரணம். இன்று நீங்கள் பேசும் வார்த்தைகள்தான் நாளைய உங்கள் அரசியல் பயணத்தின் முன்னோட்டம். அதிகாரம் இல்லாத இன்றைய நிலையிலேயே இவ்வளவு அலட்சியமும் அக்கறையின்மையும் இருக்குமென்றால், நாளை அதிகாரம் கிடைத்தால் மக்களின் உயிருக்கு என்ன மதிப்பு இருக்கும்? இதுதான் மக்களைக் கேள்வி கேட்க வைக்கிறது. மனிதம் அற்ற அதிகாரம் ஆபத்தானது கரூர் பேரவலம் என்பது ஒரு விபத்து மட்டுமல்ல; அது உங்களின் பொறுப்பின்மை யின் கோரத் தாண்டவம். அதற்குப் பொறுப் ப்பேற்காமல், குற்ற உணர்வு காட்டாமல், “பழி” என்ற சொல்லுக்குள் ஒளிந்துகொள்வது ஒரு தலைவருக்கு அழகல்ல. மக்கள் எதையும் எளிதில் மறக்க மாட்டார்கள்; 41 உயிர்களின் மரணமும் மறக்கப்படாது. அரசியலில் மனி தம் இல்லையெனில், அது அதிகாரமாக மாறும்போது மிகப்பெரிய ஆபத்தாகவே முடியும். “பழி” சுமத்தப்படுவதாக அங்க லாய்ப்பதை விடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங் களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.</p>
